அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறையின் வழிகாட்டுதலின் பேரில், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள்  நடத்தப்பட்டன.  பொறுப்பு முதல்வர் ரகுபதி தலைமை வகித்து, தகவல் அறியும் உரிமையின் முக்கியத்துவத்தை விளக்கி, சமூக நலனுக்காக அந்தச் சட்டம் வழங்கும் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளை பற்றி பேசினார்.     மாணவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.  மாணவர்களுக்கிடையே மரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது. இதில் பல மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி எடுத்துரைத்தனர். மேலும் வினாடிவினா, கட்டுரைப் போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பேராசிரியர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
Next Story