மல்ல சமுத்திரம் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்லாதது குறித்து பொதுமக்கள் புகார் ஆர்டிஓ நேரில் ஆய்வு

மல்ல சமுத்திரம் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்லாதது குறித்து பொதுமக்கள் புகார் ஆர்டிஓ நேரில் ஆய்வு
X
திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் சென்று பயணிகளை ஏற்றாமல் வெளியே பயணிகளை இறக்கிவிட்டு செல்வதாகவும், இதனால் வயதான பயணிகள் அலைக்கழிக்கப்படுவது குறித்து திருச்செங்கோடு ஆர்டிஓ மோகனப்பிரியாவிற்கு கிடைத்த புகாரின் பேரில்,மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரிதிடீர் ஆய்வு
பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் செல்லாதது குறித்து புகார், மல்லசமுத்திரத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு. திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் சென்று பயணிகளை ஏற்றாமல் பஸ் ஸ்டாண்டிர்கு வெளியே பயணிகளை இறக்கிவிட்டு செல்வதாகவும், இதனால் வயதான பயணிகள் உள்ளிட்ட மற்ற பயணிகள் அலைக்கழிக்கப்படுவது குறித்து திருச்செங்கோடு ஆர்டிஓ மோகனப்பிரியாவிற்கு கிடைத்த புகாரின் பேரில், அவரின் உத்தரவுப்படி மோட்டார் வாகன ஆய்வாளர் உமாமகேஸ்வரி மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் திடீர் வாகன சோதனை மேற்கொண்டார். பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமல் சென்ற பஸ்களை நிறுத்தி பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று வர வேண்டும் எனவும், ஆர்டிஓ உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். அதேபோல் டூவீலர்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் செல்போன் பேசிக்கொண்டு சென்றவர்களின் வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டு அவர்கள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Next Story