கல்லூரி மீது அவதூறு பரப்பிய இணையதளங்கள் மீது வழக்கு பதிவு

X
Komarapalayam King 24x7 |30 Oct 2025 8:54 PM ISTதனியார் கல்லூரி சம்பவத்தை இணையதளங்கள் தவறாக பதிவு செய்த நபர்கள் மீது வழக்கு பதிவு இந்த சம்ப்வம் தொடர்பாக இதுவரை 4 பேர் மீது வழக்கு பதிவு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் எக்ஸெல் குழும கல்வி நிறுவனத்தின் விடுதியில் தங்கி படிக்கும் சில மாணவர்களுக்கு கடந்த 27 ம் தேதி காலை வயிற்று போக்கு, வாந்தி பிரச்சினை ஏற்பட்டதில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உடல்நிலை சீரானதையடுத்து கல்லூரி விடுமுறையை தொடர்ந்து சொந்த ஊருக்கு சென்று விட்டனர். மாணவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கும் நிலையில் சிலர் இறந்து விட்டதாக சமூக வலைதளமான எக்ஸ் இணையதளத்தில் சிலர் சமூகத்தில் பதற்றத்தையும், சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் @pokkiri _victor மற்றும் @Phoenixadmk என்ற எக்ஸ் வலைத்தளத்தில் தவறான தகவல்களை பதிவேற்றம் செய்ததன் காரணமாக நேற்று வழக்குப்பதிவு செய்ததை தொடர்ந்து @KVFC_official இன்று karthikkumarrk_official. என்ற வலைதளத்தின் மீது கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 4 வலைத்தளங்களின் சம்மந்தப்பட்டவர்கள் மீது BNS 351(4), 353(1) (b), 192 ஆகிய பிரிவுகளின் கீழ், தவறான தகவல் பரப்புதல் மற்றும் தன்னுடைய பெயர் அல்லது முகவரியை மறைத்து தவறான தகவலை பரப்புதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவகளின் கீழ் குமாரபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பதிவேற்றம் செய்வோர் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Next Story
