இந்து முன்னணியினர் ஆலோசனை கூட்டம்

இந்து முன்னணியினர் ஆலோசனை கூட்டம்
X
குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் இந்து சமத்துவ மயான பாதுகாப்பு குறித்து இந்து முன்னணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் இந்து சமத்துவ மயான பாதுகாப்பு குறித்து இந்து முன்னணி ஆலோசனை கூட்டம் நகர தலைவர் பாலாஜி தலைமையில் நடந்தது. ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் பாலமுருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஆலோசனை கூறினார். போலி ஆவணம் தயாரித்து பிற மதத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக குமாரபாளையம் முன்னாள் வட்டாட்சியர் சிவகுமாரை கண்டித்தும், இந்து மயானங்களில் அன்னிய ஆக்கிரமிப்பு களை அப்புறப்படுத்தி தர கோரி நவ. 5ல் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உதவி தலைவர் சக்திவேல் நன்றி கூறினார். கூட்டத்தில் பா.ஜ.க. வக்கீல் தங்கவேல், சேகர், சாமுவேல், நிர்மலா, பழனிசாமி, விஎச்பி சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story