கோழி இறைச்சி கழிவுகள், இறந்தவர்கள் பயன்படுத்திய பொருள்கள் மாலைகள் ஆகியவற்றை இடுகாடு அருகே போடக் கூடாது அபராதம் விதிக்கப் படும் திருச்செங்கோடு நகர்மன்ற கூட்டத்தில் எச்சரிக்கை
Tiruchengode King 24x7 |31 Oct 2025 2:33 PM ISTதிருச்செங்கோடு நகராட்சியின் நகர் மன்ற அவசரக் கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் பொறியாளர் சரவணன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். 44 தீர்மானங்கள் நிறைவேற்றம்
திருச்செங்கோடு நகராட்சியின் நகர் மன்ற அவசரக் கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் பொறியாளர் சரவணன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.திருக்குறள் வாசித்து கூட்டத்தை நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தொடங்கி வைத்தவுடன் தீர்மானங்களின் மீது பேசிய நகர்மன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கூறியதாவது 1வது வார்டு அதிமுக உறுப்பினர் கார்த்திகேயன்: எனது வார்டு பகுதியில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது என பலமுறை புகார் அளித்து விட்டேன் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை எதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் நகர் நல அலுவலர் மணிவேல்: நகரில் ஏற்கனவே ஒரு கட்டமாக நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது தற்போது இரண்டாம் கட்டத்திற்கு கணக்கெடுப்பு பணி நடைபெற்று உள்ளது பெட் கேர் பவுண்டேஷன் என்கிற நிறுவனத்திடம் ஒப்பந்தம் கேட்கப்பட்டுள்ளது அவர்கள் மூலமாகத்தான் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்கிற நிலை இருப்பதால் அவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து அதே பகுதிகளில் விட்டு விடுவார்கள் அவ்வாறு நடக்கும் போது நாய் தொல்லை குறையும் 5வார்டு திமுக நகர் மன்ற உறுப்பினர் ராஜா:செங்கோடம்பாளையம் சுடுகாடு பகுதியில் உள்ள ரோட்டில் நெசவாளர் காலனி அருகே இறைச்சி கழிவுகளை ஓட்டல் கடை கழிவுகளை மூட்டைகளாக கட்டிக் கொண்டு வந்து போட்டு விடுகிறார்கள் இதனால் துர்நாற்றம் வீசுகிறது அதோடு இறந்தவர்கள் உடலை எரிக்க வருபவர்கள் மாலைகளை அங்கேயே கொட்டி செல்கிறார்கள் மேலும் இறந்தவர்கள் பயன்படுத்திய படுக்கை,உள்ளிட்ட பொருட்களை குப்பைகளாக கொட்டி விட்டு சென்று விடுகின்றனர் இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது யாரும் இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாத அவல நிலை உள்ளது. ஈரோடு எரிவாக தகனமேடையில் ஆம்புலன்ஸில் கொண்டுவரப்படும் இறந்தவர்கள் உடலில் ஒரு மாலை மட்டுமே அணிவித்திருக்க வேண்டும் இறந்தவர்களோடு எந்த பொருளையும் ஆம்புலன்ஸில் ஏற்றி வரக்கூடாது என சொல்வதைப்போல் இங்கும் சொல்ல நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் இடுகாட்டுப் பகுதியில் மின்விளக்கு வசதி குறைவாக உள்ளதுஉடனடியாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்மற்றும் எரிவாயு தகனமேடை அமைந்துள்ள கோழிக்கால் நத்தம் ரோடு பகுதியில் குப்பைகளை தினசரி அகற்றினால்யார் குப்பைகளை கொட்டுகிறார்கள் என தெரிந்து கொள்ள முடியும் அவ்வாறு செய்யாவிட்டால் நான் கொட்டவில்லை என மறுத்து விடுவார்கள்.காலனி பகுதியில் விசைத்தறிகளுக்கு புதிதாக வரி விதிக்கப்பட்டது அதனை நிறுத்த வேண்டும் என மனு கொடுத்தோம் இதுவரை பழைய வரி விதிக்கப்படவில்லை புதிய வரியை நடைமுறைகள் உள்ளது சில காலம் அபராதம் விதிக்கப்படாமல் இருந்தது தற்போது அபராதம் விதிக்கப்படுகிறது இதனால் நெசவாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள் பழைய வரி விதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் புதிய வரியை மாற்றும் வரை அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும் நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ரோட்டரி சங்கம் நிர்வகித்து வரும் எரிவாயு தகனம் அடைக்கு இனி ஆம்புலன்ஸில் இறந்தவர்கள் உடலில் ஒரு மாலை மட்டுமே எடுத்து வர வேண்டும் ரோடுகளில் மாலைகளை போடக்கூடாது இறந்தவர்களுடைய எந்த பொருளையும் எடுத்து வந்து சுடுகாடு அருகே போடக்கூடாது என அறிவிக்க வேண்டும் என நகராட்சி சார்பில் கடிதம் கொடுத்து விடுங்கள் மேலும் அவ்வாறு யாராவது கொட்டினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் இறப்புச் சான்று பெறும்போது கொட்டியவர்கள் யார் என கண்டறியப்பட்டு அபராதத்தை வசூலித்த பிறகு தான் இறப்பு சான்று கொடுக்க வேண்டும். இடுகாட்டுப்பகுதியில் மின்விளக்குகள் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.அந்தப் பகுதியில் உள்ள இறைச்சி கடைகள் ஓட்டல் கடைகள் உரிமையாளர்களை அழைத்து ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்து குப்பைகளை கொட்டக் கூடாது என அறிவுறுத்த வேண்டும் மீறி குப்பைகள் கொட்டுவது கண்டுபிடிக்கப் பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்க வேண்டும். 27 வது வார்டு திமுக உறுப்பினர் அண்ணாமலை டி சி எம் எஸ் சுற்றுச் சுவர் உடைந்துசாக்கடைக்குள் விழுந்து கிடக்கிறது அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் நரிப்பள்ளம் பகுதியில் சாலை சேதம் அடைந்துள்ளது புதிதாக சாலை அமைக்க விட்டாலும் பேட்ச் ஒர்க் ஆவது செய்து கொடுக்க வேண்டும். நரிப்பள்ளம்சிலை பின்பக்கம் உள்ள கழிவறை ஒன்று 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது அதன் கட்டிடம் பலம் இழந்து உள்ளது அதனை மாற்றி புதிதாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் சாலை விரிவாக்க பணி நடக்கும் போது குடிநீர் குழாய்கள் உடைந்து போய் 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர் தற்காலிகமாக குடிநீர் குழாய்கள் அமைத்து பொதுமக்கள் சிரமம் இன்றி தண்ணீர் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்புரவு அலுவலர் சோழராஜ் டி சி எம் எஸ் சுற்றுச்சூழல் இடிந்து விழுந்துள்ள பகுதியில் ஜேசிபி கொண்டு சுத்தம் செய்ய முடியவில்லை. சிறிய வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அது வந்தவுடன் கொட்டியுள்ள சுவர் கழிவுகள் அகற்றப்படும். பொறியாளர் சரவணன் தற்காலிக குடிநீர் குழாய் அமைக்க முடியாது குடிநீர் தட்டுப்பாடு இருக்குமானால் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யலாமே தவிர தற்காலிக குடிநீர் குழாய் அமைக்கும் வாய்ப்பு இல்லை கழிப்பறை கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.பேட்ச் ஒர்க் செய்யும் பணி நடந்து வருகிறது உங்கள் பகுதியிலும் பேட்ச் ஒர்க் செய்யப்படும் 1வதுவார்டு திமுக உறுப்பினர் மாதேஸ்வரன் முக்கியமான அலுவலகங்கள் உள்ள ஒன்னாவது வார்டு பகுதியில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் இல்லை அவ்வாறு இருப்பவர்களையும் வேறு வார்டுகளுக்கு அழைத்துச் சென்று விடுகிறார்கள் சீதாராம் பாளையம் முனியப்பன் கோவில் இணைப்பு பகுதியில் உள்ள ரோட்டில் குப்பைகள் சாக்கடைகள் தேங்கியுள்ளதுசாலைகளில் உள்ள சென்டர் மீடியங்களில் போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும்வாழ்வில் தூய்மைப் பணியாளர்கள் அதிகமாக உள்ளனர்.அவர்களில் ஓய்வு பெற்ற 37 பேருக்கு சொற்ப அளவை தொகைகள் கொடுக்கப்பட்டு ஓய்வூதியப் பயன்கள் இதுவரை வழங்கப்படவில்லை அவர்கள் சிரமத்தில் உள்ளனர் விரைவாக ஓய்வூதியப் பணியாளர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஏற்கனவே இது குறித்து நீங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததை எடுத்து தற்போது எந்த பணியாளர்களும் வேறுபாடுகளுக்கு அழைக்கப்படுவதில்லை முக்கியமான அலுவலகப் பணிகள் எதுக்காக அழைத்து இருந்தால் மட்டுமே அவர்கள் சென்றிருப்பார்கள் சென்டர் மீடியினில் போஸ்டர் ஒட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் அனுப்பப்படும்.மே மாதத்தில் 37 பேர் பணி ஓய்வு பெற்றதால் நகராட்சி நிதியிலிருந்து ஓய்வு பலன்கள் கொடுக்க வேண்டியிருப்பதால் காலதாமதம் ஆகிறது பலருக்கும் அவ்வப்போது ஓய்வூதிய பலன்கள் கொடுக்கப்பட்டு வருகிறது இன்னும் 77 லட்ச ரூபாய் வழங்கப்பட வேண்டி உள்ளது விரைவில் அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் ஏழாவது வார்டு திமுக நகர் மன்ற உறுப்பினர் கலையரசி எனது வார்டு பகுதியில் வேறு பகுதிகளில் இருந்து குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டி விட்டு சென்று விடுகிறார்கள் எவ்வளவுதான் குப்பைகளை அள்ளினாலும் இரவு நேரத்தில் யாரும் இல்லாத நேரத்தில் ஒன்றாவது வார்டு ஏழாவது வார்டு இணைப்பு பகுதியாக உள்ள ரோட்டில் குப்பைகளை ரோட்டிலும் சாக்கடைகளிலும் கொட்டி விட்டு சென்று விடுவதால் கழிவுநீர் செல்ல முடியாமல் ரோட்டில் தேங்கியுள்ளது துப்புரவு அலுவலர் சோழராஜ் நகர்மன்ற கூட்டம் முடிந்தவுடன் நேரில் ஆய்வு செய்து உடனடியாக குப்பைகளை அகற்றவும் வேறு யாரும் அங்கே குப்பைகளை கொட்டாத வகையில் ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் 16 வது வார்டு அதிமுக உறுப்பினர் மைதிலி எங்களது வாழ்த்து பகுதியில் ஆறு தூய்மை பணியாளர்கள் இருக்கிறார்கள் ஆனால் நான்கு ரத வீதிகளை சுத்தம் செய்யவும்ஆறுமுகசாமி கோவில் பகுதியைசெய்யவும் ஐந்து பேர் சென்று விடுகின்றனர் ஒருவர் மட்டுமே அனைத்து பகுதிகளிலும் குப்பைகளை வாங்க வருவதால் காலை முதல் மாலை வரை சிரமப்பட்டு வேலை செய்கிறார் வேறு எந்த பணியும் அவரால் செய்ய முடியவில்லை.புல் பூண்டுகளை கூட அகற்ற முடியவில்லை எனவே நான்கு ரக வீதிகளை சுத்தம் செய்ய தனி குழு ஒன்றை அமைக்க வேண்டும்.பஜார் தெருவில் குடிநீர் வந்து 12ஆவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் நகராட்சி பணியாளர்களிடம் கேட்டால் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் காலதாமதம் என கூறுகிறார்கள் நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு துப்புரவு அலுவலர் உறுப்பினரின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு நான்கு ரக வீதி ஆறுமுகசாமி கோவில் பகுதிக்கு தனி ஆட்களை நியமித்துவிட்டு வார்டு பகுதிக்கு தனி ஆட்களை நியமிக்க வேண்டும் என்பது அதிகப்படியானதாக உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன் 31வது வார்டு திமுக உறுப்பினர் முருகேசன் எனது வார்டு பகுதியில்நகராட்சி இடங்கள் அதிகமாக உள்ளது அதில் ஒரு கார் நிறுத்துமிடம் உருவாக்கினால் ரோட்டில் கார்களை நிறுத்தும் மக்கள் அங்கே நிறுத்திக் கொள்வார்கள் நகராட்சிக்கும் ஒரு வருவாய் கிடைக்கும் மேலும் ஆம்புலன்ஸோ மற்ற வாகனங்கள் செல்லவோ இடைஞ்சல் இல்லாமல் இருக்கும் நகராட்சி பொறியாளர் சரவணன் நகராட்சி இடங்கள் அதிகமாக இருப்பதால்கார் நிறுத்துமிடம் கட்ட நிதி கேட்டுப் பெற முடியும் நகராட்சிக்கும் கூடுதல் வருவாய் வரும் என்பதால் உறுப்பினரின் யோசனையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு உறுப்பினரின் கருத்து உபயோகமானதாக இருப்பதால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் 21 வது வார்டு அதிமுக உறுப்பினர் மல்லிகா கூட்டப்பள்ளி பகுதிக்கு பூலாம்பட்டி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது எங்களது பகுதியில் உள்ள பூங்கா பராமரிப்பின்றி புதர் மண்டி கிடக்கிறது இங்கு சமூக விரோத செயல்கள் நடப்பதால் அதனை தூய்மைப்படுத்தி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு பூலாம்பட்டி குடிநீர் கூட்டப் பள்ளியில் உள்ள மூன்று வார்டுகளுக்கும் கிடைக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது 65 லட்சம் ரூபாய் செலவாகும் என்பதால் நகராட்சி நிதியில் தான் அது செய்யப்பட வேண்டும் என்பதாலும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது விரைவில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் பூங்காவை சீரமைக்கவும் புதர்களை அகற்றவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் 27 வது வார்டு திமுக உறுப்பினர் அண்ணாமலை பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி தெப்ப தேர் விடும் நிகழ்ச்சி நடக்க உள்ளது வெள்ளிக்கிழமை நடத்துவதால்கம்பம் விடும் நிகழ்வுக்கு வருபவர்கள் எப்ப தேரின் மீது ஏறி குதிக்கிறார்கள் இதனால் கடந்த ஆண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார் இதனால் இந்த முறை செவ்வாய்க்கிழமை வைக்க திட்டமிடப்பட்டதை வரவேற்கிறோம் ஆனால் உடனடியாக வெள்ளிக்கிழமைக்குள் அதனை அகற்றி விட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு செவ்வாய்க்கிழமை தெப்பத்தேர் முடிந்தவுடன் வெள்ளிக்கிழமைக்குள்தெப்பத்தேர் கட்டுமானத்தை பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார் கூட்டத்தில் 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story



