மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் ஆதரவு மற்றும் பங்குபெற்ற நிறுவனங்களுக்கு தங்கம் மருத்துவமனையின் சார்பாக பாராட்டு விழா.
NAMAKKAL KING 24X7 B |31 Oct 2025 5:48 PM ISTஅக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு தங்கம் மருத்துவமனை இலவச பரிசோதனை முகாம் இம்மாதம் முழுவதும் நாமக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள தனியார் நிறுவனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் நடத்தப்பட்டது.
இம்முகாம் சிறப்பாக நடைபெற ஆதரவு நிறுவனங்களையும், இதற்கு நன்கொடை அளித்த வழங்கிய கொடையாளர்களையும் கெளரவிக்கும் விதமாக அவர்களுக்கு பாராட்டு விழா தங்கம் மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தனராக நாமக்கல் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ சங்க செயலாளர் மரு. கவிதா சரவணகுமார் அவர்கள் கலந்துகொண்டார். இச்சிறப்பு முகாமில் இந்த ஆண்டு சுமார் 2000 பேருக்கு பரிசோதனைகள் செய்து அதில் 167 பேருக்கு மோமோகிராம் சோதனை செய்யப்பட்டு 11 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக மரு. அருணா பிரபு (அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்) அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் இலவச முகாமிற்கு உறுதுணையாக இருந்த நன்கொடையாளர்களுக்கும், தனியார் நிறுவனகளுக்கும் பாராட்டு கேடையம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி தங்கம் மருத்துவமனையின் நிறுவனர் மரு. குழந்தைவேல் மற்றும் இணை நிறுவனர் மரு.மல்லிகா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தங்கம் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
Next Story


