திருச்செங்கோடு ஐந்தாவது வார்டு நெசவாளர் காலனி மழை நீர் வடிகால் அமைக்க நமக்கு நாமே திட்டத்தில் திட்ட வரைவு மூன்றில் ஒரு பங்கு தொகையை பொதுமக்கள் சார்பில் வழங்கினர்

திருச்செங்கோடு நகராட்சி ஐந்தாவது வார்டு கோம்பை நகர் பகுதியில்10 லட்சம் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தில் மழை நீர் வடிகால் அமைக்க பொதுமக்கள் பங்களிப்பான ரூ 3 லட்சத்து 35 ஆயிரம் நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபுவிடம் நகர்மன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் ஊர் நல கமிட்டியினர்வழங்கினர்
திருச்செங்கோடு நகராட்சி கோம்பை நகர் தெரு எண் ஒன்பது பகுதியில் இருந்து விஐபி அவென்யூ வரை நீண்ட நாட்களாக மழை நீர் வடிகால் இல்லாமல் இருந்ததால் பொதுமக்கள் மழைநீர் வடிகால் வேண்டி நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபுவிடம் கோரிக்கை வைத்தனர்.நமக்கு நாமே திட்டத்தில் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்க திட்ட வரைவு தயாரிக்கப் பட்டது இதனை அடுத்து பொதுமக்களின் பங்களிப்பாக 3 ல்ஒரு பங்கு தொகையான 3 லட்சத்து 35 ஆயிரத்துக்கான வரைவோலை இன்று நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு விடம் வழங்கப் பட்டது. பொதுமக்கள் சார்பில் ஐந்தாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.ராஜா ஊர்நலக்கமிட்டி தலைவர் துரைசாமி, செயலாளர் ராதாகிருஷ்ணன் பகுதியைச் சேர்ந்த விகே.கந்தசாமி டி.சி.செல்வம்ஆகியோர் வரைவோலையை வழங்கினார்கள்.
Next Story