ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை..

X
Rasipuram King 24x7 |31 Oct 2025 9:06 PM ISTராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஐப்பசி மாத பண்டிகை முன்னிட்டு கடந்த வாரம் பூச்சாற்று விழா தொடங்கியது. இதனை அடுத்து நாள்தோறும் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் பல்வேறு கட்டளைதாரர்களால் சிறப்பு பூஜை அபிஷேகம் நடைபெற்று வந்தது இந்நிலையில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் எலுமிச்சை பழம் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
Next Story
