நாமக்கலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகையை ஒட்டி பிரச்சார வாகனம் துவக்கம் மற்றும் துண்டு பிரசுரம் வினியோகம்!

நாமக்கலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகையை ஒட்டி பிரச்சார வாகனம் துவக்கம் மற்றும் துண்டு பிரசுரம் வினியோகம்!
X
விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் நரேஷ் ராஜசேகர் ஏற்பாட்டில் பிரச்சார வாகனத்தை முன்னாள் மாவட்ட தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான சத்தியமூர்த்தி துவக்கி வைத்து பொது மக்களிடையே துண்டு பிரசுரம் விநியோகித்து ஆதரவு திரட்டினார்.
தமிழக பாஜக சார்பில் தமிழக முழுவதும் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் தலை நிமிர! தமிழரின் பயணம்! என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு பிரச்சார பயணம் மேற்கொண்டு உள்ளார். அதன் ஒரு பகுதியாக வருகின்ற நவம்பர் மாதம் நான்காம் தேதி நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் நாமக்கல் பூங்கா சாலை அருகே மாலை 5 மணி அளவில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாநில தலைவரின் பிரச்சார யாத்திரையை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக
மாநில திறன் மேம்பாடு மற்றும் விளையாட்டு பிரிவு சார்பில் விளையாட்டு பிரிவு மாநிலத் தலைவர் நயினார் பாலாஜி வழிகாட்டுதல் பெயரில், விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் நரேஷ் ராஜசேகர் ஏற்பாட்டில் பிரச்சார வாகனத்தை முன்னாள் மாவட்ட தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான சத்தியமூர்த்தி துவக்கி வைத்து பொது மக்களிடையே துண்டு பிரசுரம் விநியோகித்து ஆதரவு திரட்டினார்.
இந்த நிகழ்வில் பாஜக மூத்த நிர்வாகி எம் எஸ் மணி , சின்னுசாமி,சிவா, சதிஷ், சிலம்பரசன், இளங்கோ, சக்திவேல் பிரணவ் குமார் உள்ளிட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்
Next Story