தாழ்த்தப்பட்டவர்களை தரக்குறைவாக விமர்சித்த அதிமுக செய்தி தொடர்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மை எரிப்பு தமிழ் புலிகள் கட்சி போராட்டம்

தலித் மக்கள் குறித்து தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் அவதூறாக பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்தியனை கண்டிக்காத நடவடிக்கை எடுக்காத அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட தமிழ் புலிகள் கட்சி சார்பில் எடப்பாடி பழனிச்சாமியின் உருவ பொம்மை எரிப்பு
கடந்த சில தினங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து பேசும்போது அவதூறாக அவமானப்படுத்தும் விதமாக பேசியதை விவாதத்தில் இருந்தால் பலரும் கண்டித்து வார்த்தையை திரும்ப பெற வேண்டும் என கூறியும் திரும்பப் பெறாத கோவை சத்யன் மற்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்காத அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட தமிழ் புலிகள் கட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்பாட்டத்தில் கோவை சத்தியனையும் எடப்பாடி பழனிச்சாமியின் கண்டித்துகோசங்கள் எழுப்பப்பட்டது கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் செல்வகுமார்தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்தபோது கட்சியை சேர்ந்த சிலர் எடப்பாடியின் உருவ பொம்மையை எரித்தனர் எரிந்து கொண்டிருந்த உருவ பொம்மை முன்பு நின்று கோஷங்கள் எழுப்பினர் எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மை எரிக்கப்பட்டதை கண்ட பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தண்ணி ஊற்றி தீயை அணைத்தனர்.உருவ பொம்மை எரிப்பு போராட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசியதமிழ் புலிகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் செல்வகுமார் கூறியதாவது கடந்த சில தினங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து தரக்குறைவாகவும் அவமானப்படுத்தும் விதத்திலும் பேசியதை விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் கண்டித்தும் தான் பேசியது திரும்பப் பெறாமல் தான் பேசியது சரிதான் என்பது போல் நடந்து கொண்ட கோவை சத்யன் மற்றும் அவரைக் கண்டித்து நடவடிக்கை எடுக்காத அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை கண்டித்து உருவ பொம்மை எரித்து போராட்டம் நடத்தியுள்ளோம் தலித் மக்களின் வாக்குகளை நம்பித்தான்எம்ஜிஆர் ஜெயலலிதாஆகியோர் இருந்த நிலையில் தற்போது தலித் மக்களை அவமானப்படுத்தும் பேச்சை ஊக்கி வைக்கும் வகையில் கோவை சத்தியம் மீது நடவடிக்கை எடுக்காத எடப்பாடி பழனிச்சாமி வரும் தேர்தலில் தலித் மக்களை சந்தித்து வாக்கு கேட்க முடியாத நிலை ஏற்படும் என எச்சரிக்கிறோம் என கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்
Next Story