கிராம சபா கூட்டங்கள் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்பு

Komarapalayam King 24x7 |1 Nov 2025 8:59 PM ISTகுமாரபாளையம் அருகே ஊராட்சி அலுவலகங்கள் சார்பில் நடந்த கிராம சபா கூட்டங்களில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்
குமாரபாளையம் அருகே ஊராட்சி அலுவலகங்கள் சார்பில் நடந்த கிராம சபா கூட்டங்களில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர். தட்டான் குட்டை ஊராட்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். குப்பாண்டபாளையம் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் தலைமை வகித்தார். பல்லக்காபாளையம் பகுதியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், தணிக்கை அலுவலர் குப்புலட்சுமி தலைமை வகிக்க, தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலர் நாச்சிமுத்து, மாவட்ட அறங்காவலர் துறை குழு உறுப்பினர் சுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர். அனைத்து பகுதியில் நடந்த கிராமசபா கூட்டங்களில், சாலை வசதி, வடிகால், குடிநீர் வினியோகம், குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, பொதுக்கழிப்பிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
Next Story
