திருச்செங்கோட்டை அடுத்த கொக்கராயன் பேட்டையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமியர்கள் சீருடன் நடந்த கும்பாபிஷேக விழா
Tiruchengode King 24x7 |2 Nov 2025 2:42 PM ISTகொக்கராயன் பேட்டைஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கும்பாபிஷேக திருவிழா மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் விதமாகஅல் முகமதியா ஜாமியா மஸ்ஜித் நிர்வாகம்சார்பில் கும்பாபிஷேக நிகழ்வுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி 9 தட்டு சீர்வரிசை கோவில் ஒப்படைத்த இஸ்லாமியர்கள் எதிர் நின்று வரவேற்ற கோவில் நிர்வாகத்தினர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த கொக்கராயன் பேட்டையில்இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ள நிலையில் இரண்டாம் கால பூஜைகள் இன்று நடைபெற தொடங்கிய போது ஊர் பொதுமக்கள் சார்பில் முளைப்பாரி எடுத்து குதிரைகள் காளை மாடுகளுடன் ஊர்வலம் வந்துகோவிலில் முளைப்பாரியை வைத்தனர்.இதனைத் தொடர்ந்து கோவில் விழா குழுவினர்காலகாலமாக தொன்று தொட்டு நடைபெற்று வரும் பாரம்பரிய முறைப்படி மேளதாளங்களுடன்கோவில் அருகில் உள்ள அல் முகமதியா ஜாமியா மஜீத்க்குசென்று கும்பாபிஷேக நிகழ்வுக்கு அந்தப் பகுதி ஜமாத்தார்களை அழைத்தனர் இதனை ஏற்று பள்ளிவாசல் மூத்தவல்லி ஜலீல் தலைமையில்சுமார் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெருமக்கள் அன்னதானத்திற்கான ரொக்கப் பணம் ஒரு லட்சம் மாலை சந்தானம் பழங்கள் உள்ளிட்ட ஒன்பது வகையான சீர்வரிசை பொருள்களுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து தங்களது காணிக்கைகளை செலுத்தினர் இது குறித்து பள்ளிவாசல் முத்தவல்லி ஜல்லி மற்றும் கோவில் விழா குழுவைச் சேர்ந்த மோகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசும்போது காலகாலமாக மாரியம்மன் திருவிழா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் ஆகியவை நடக்கும்போது மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில்ஜாதி மத வேறுபாடுகளை கடந்து இஸ்லாமிய பெருமக்கள் 9 வகையான சீர் தட்டுகள் உடன் கோவிலுக்கு வந்து அன்னதானத்திற்கு தங்களால் இயன்ற பொருளு உதவியை வழங்குவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டு நடக்கிற கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கும் சீர்வரிசை வழங்கி உள்ளோம் பள்ளிவாசலில் நடக்கும் நிகழ்ச்சிக்கு நாங்களும் எங்கள் கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிக்கு பள்ளிவாசலைச் சேர்ந்த இஸ்லாமிய பெருமக்களும் இது போல் ஒருவருக்கொருவர் ஜாதி மதங்களை கடந்து எந்தவித மத வேற்றுமையும் இன்றி மாமன் மைத்துனர் உறவு முறை கொண்டாடி தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம் இதே நிலை தொடர்ந்து நீடிக்க வேண்டும் எனவும் விரும்புகிறோம் எனக் கூறினார்கள்.
Next Story


