திருச்செங்கோட்டில் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில்முப்பெரும் விழா

திருச்செங்கோட்டில்திருச்செங்கோடு பூவிதழ் அறக்கட்டளை தலைவரும் சேலம் தொன்மைத் தமிழ் சங்க பொருளாளருமான இளைய மூர்த்தி துவக்கி நடத்தி வரும் எம்பவர் அகாடமி இரண்டாம் ஆண்டு துவக்க விழா, புரட்டிப்பார் என்ற நூல் வெளியீட்டு விழா, விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
திருச்செங்கோட்டில் பல்வேறு சமூக மற்றும் கல்விப் பணிகளை செய்து வரும் பூவிதழ் அறக்கட்டளை தலைவர் மற்றும் சேலம் தொன்மைத் தமிழ் சங்க பொருளாளர் கவிஞர் இளைய மூர்த்தி நிறுவனராக இருந்து நடத்தி வரும் எம் பவர் அகாடமி இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் புரட்டிப் பார் என்ற நூல் வெளியீட்டு விழா தேசிய மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகளை பாராட்டி சிறப்பிக்கும் விழா என முப்பெரும் விழா வாலரை கேட் பகுதியில் உள்ளயுகதீரன் மஹாலில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு பி ஆர் டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன் தலைமை வகித்தார் ஓமலூர் சேர்ந்த ஆன்மீக சொற்பொழிவாளர் கண்ணன் முன்னிலை வகித்தார் விழாவை நல்லாசிரியர் விருது பெற்ற சேலம் மாவட்டம் கொங்கு வட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சு பாஸ்கர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் கவிஞர் இளைய மூர்த்தி எழுதிய புரட்டிப்பார் உலகை வெல்ல என்ற நூலை சென்னை சிண்டிகேட் வங்கியின் ஓய்வு பெற்ற மண்டல மேலாளர் பழனி தங்கவேல் வெளியிட பிஆர்டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன் பெற்றுக் கொண்டார் இதே போல் கவிஞரின் மற்றொரு நூலான அழுகையின் மொழி புன்னகை என்ற நூலை கவிஞரின் தாயார் செல்வி இளையப்பன் வெளியிட 5 பணியை சேர்ந்த எம் எஸ் பி பில்டர்ஸ் உரிமையாளர் மனோகரன் பெற்றுக்கொண்டார் நூல்கள் குறித்து தமிழ்நாடு அரசின் தூய தமிழ் பற்றாளர் விருது பெற்ற திருச்சங்கோட்டை சேர்ந்த கவிஞர் வினோ என்பவர் பற்றாளர்ஆய்வு செய்து பேசினார்நிகழ்ச்சியில் தேசிய மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற சிறந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகளைபல்வேறு முன்னணி பிரமுகர்கள் பாராட்டி பதக்கங்கள் அணிவித்து பரிசுகள் வழங்கினார்கள் நிகழ்ச்சியின் முடிவில் பூவிதழ் அறக்கட்டளை தலைவரும் சேலம் தொன்மைத் தமிழ் சங்க துணை பொருளாளர் எம்பவர் அகாடமி நிறுவனருமான கவிஞர் இளைய மூர்த்தி அனைவருக்கும் நன்றி கூறினார்
Next Story