இல்லம் தேடி மரக்கன்று இல்லம் தோறும் மரக்கன்று

X
Komarapalayam King 24x7 |3 Nov 2025 7:04 PM ISTகுமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சார்பில் இல்லம் தேடி மரக்கன்று இல்லம் தோறும் மரக்கன்று திட்டம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சார்பில் இல்லம் தேடி மரக்கன்று இல்லம் தோறும் மரக்கன்று திட்டம் சார்பில், அமைப்பாளர் சீனிவாசன் தலைமையில் மரக்கன்றுகள் வீடு வேதாக நேரில் சென்று வழங்கப்பட்டன. பூ வகை , மருத்துவ வகை செடிகளும் மற்றும் நிழல் தரும் மரக்கன்றுகளையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி அவர்கள் இல்லத்தின் முன்பாக நட்டு வைத்தனர். இன்றைய சூழலில் மரக்கன்றுகள் நடுவது மிகவும் இன்றிமையாதது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இயற்கையை பேணி காக்கவும் மரக்கன்றுகள் நடுவது அவசியம் என கூறியதுடன், மேலும் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் தேவைப்பட்டால் தளிர்விடும் பாரதம் அமைப்பினரை (86678 74420, 99522 57652) தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. பாலாஜி, சரண்யா, சம்ரிதி உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
