தனியார் கல்லூரியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தனியார் கல்லூரியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X
குமாரபாளையத்தில் தனியார் கல்லூரியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
குமாரபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் உணவருந்தி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும், கல்லூரி நிர்வாகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் அரவிந்தன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் சினேகா ஆர்பாட்டத்தை துவக்கி வைத்தார். இவர் பேசியதாவது: இந்த கல்லூரியில் 2 ஆயிரம் மாணக்கர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இதில் மாணவிகளுக்கு போதுமான கழிப்பறை இல்லை. அதுவும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் ஆண்கள் கழிப்பறையை உபயோகப்படுத்தும் நிலை உள்ளது. உணவும் சுகாதாரமாக வழங்காததால்தான், அதிக அளவிலான மாணவர்கள் பாதிக்கபட்டுள்ளனர்.இனி இது போல் யாரும் பாதிக்கப்படக்கூடாது. மூன்று மாதம் ஒருமுறை இந்த கல்லூரி உணவு விடுதியில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்து சான்று வழங்க வேண்டும். இது அனைத்து கல்லூரியிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் சி.பி..ஐ. நகர செயலர் கணேஷ்குமார், மாணவர் பெருமன்ற மாநில குழு உறுப்பினர் புவனேஸ்வரன், மாவட்ட தலைவர் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story