ராசிபுரம் அருகே உள்ள பிள்ளா நல்லூர் அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ,ஸ்ரீ பத்ரகாளியம்மன் ,ஸ்ரீ நவகிரகங்கள், ஸ்ரீ காலபைரவர், ஸ்ரீ கருப்பனார் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது..

X
Rasipuram King 24x7 |3 Nov 2025 7:11 PM ISTராசிபுரம் அருகே உள்ள பிள்ளா நல்லூர் அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ,ஸ்ரீ பத்ரகாளியம்மன் ,ஸ்ரீ நவகிரகங்கள், ஸ்ரீ காலபைரவர், ஸ்ரீ கருப்பனார் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பிள்ளா நல்லூர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஸ்ரீ நவகிரகங்கள் ஸ்ரீ காலபைரவர் ஸ்ரீ கருப்பனார் மற்றும் பரிவார மூர்த்திகள் சாமிக்கு மகா கும்பாபிஷேக விழா செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த மாதம் 12ஆம் தேதி முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சி தொடங்கி யாக சாலை கிராம சாந்தி பூஜை , மகா கணபதி ஹோமம் நவகிரக ஹோமம், குபேர லட்சுமி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்று காவிரி தீர்த்தம், முளைப்பாரி ஊர்வலம் போன்றவை சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோபுர கலசம் வைத்தல், கண் திறப்பு நிகழ்ச்சி மற்றும் முதலாம் யாக சாலை பூஜைகள், இரண்டாம் கால யாக சாலை பூஜை, மூன்றாம் கால யாக பூஜை, நடைபெற்று கோபுர கலசங்களுக்கு அகம முறைப்படி வேத மந்திரங்கள் முழங்கி மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்த மகா கும்பாபிஷேகத்தை சிவசுப்பிரமணியர் ஆலய அர்ச்சகர் கும்பாபிஷேக கலாநிதி பிரதிஷ்ட ரத்னம் சிவஸ்ரீ மு பழனிசாமி சிவாச்சாரியார், சிவஸ்ரீ மு. ரத்ன சபாபதி சிவாச்சாரியார் ஆகியோர் சிறப்பாக நடத்தி வைத்தனர். இதைத் தொடர்ந்து ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
