மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தோ்தல்: வேட்பு மனு தாக்கல் நிறைவு
Namakkal King 24x7 |3 Nov 2025 9:37 PM ISTலாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தில் தலைவர் /செயலாளர் /பொருளாளர் /ஐந்து துணைத் தலைவர்கள்,ஐந்து இணை செயலாளர்கள் என மொத்தம் 13 பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.
2025-28 மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின்- தமிழ்நாடு தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை காலையில் தொடங்கி மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.நாமக்கல்லை தலைமை இடமாகக் கொண்டு மாநில லாரி உரிமைகள் சம்மேளனம்- தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 38 மாவட்டங்களில் உள்ள 111லாரி உரிமையாளர் சங்கங்கள் சம்மேளனத்தில் இணைந்துள்ளது.2025-28 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் வருகின்ற நவம்பர் 19ஆம் தேதி நாமக்கல்- பரமத்தி சாலை வள்ளிபுரத்தில் உள்ள சம்மேளன தலைமை இடத்தில் நடைப்பெறும்.லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தில் தலைவர் /செயலாளர் /பொருளாளர் /ஐந்து துணைத் தலைவர்கள்,ஐந்து இணை செயலாளர்கள் என மொத்தம் 13 பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.தேர்தல் குழு தலைவராக அனிதா வேலு தலைமையில் தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது, இந்த குழுவில் குமாரசாமி, மூர்த்தி, அன்பு ஆகியோர் உள்ளனர்.தோ்தல் கமிட்டி வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (நவம்பர் -3 ) காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. செல்லுபடியாகும் வேட்பு மனுக்களின் பட்டியல் அன்றே தினமே மாலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்டது. வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான காலம் வருகிற புதன்கிழமை (நவம்பர் -5) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை மாலை 5 மணியளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.*மேற்கண்ட பதவிகளுக்கு வேறு யாரும் போட்டியிடவில்லை என்பதால் வேட்புமனு தாக்கல் செய்த அனைவரும் ஏகமனதாக தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story



