தொப்பம்பட்டி ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் தொப்பம்பட்டி ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு சார்ந்து கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பிரவீன் குமார் தலைமை வகித்தார்.இக்கூட்டத்தில் பள்ளியில் இருபால் ஆசிரியர்கள் 27 பேரும்,510 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். முன்னதாக போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்து கருத்துரையை நாமகிரிப்பேட்டை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்சிநர் திரு சென்றாய பெருமாள் அவர்கள் எடுத்துக் கூறினார் தொடர்ந்துநாமகிரிப்பேட்டை கண்காணிப்பு அலுவலரும்பள்ளித் துணை ஆய்வாளருமான கை .பெரியசாமி மாணவர்களுக்கு உறுதிமொழி வாசித்து போதைப்பொருள் விழிப்புணர் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கச் செய்தார்.ஆசிரியர்களை செயலி பதிவிறக்கம் செய்து போதைப்பொருள் விழிப்புணர்வு சார்ந்த பதிவுகளை பதிவேற்றம் செய்திட வழி காட்டினார்.அதன்படி பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும்Drug free Tamil Nadu செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த. முனைந்தனர்.எந்த வழியிலும் பள்ளி வளாகத்திற்குள் போதைப் பொருள்கள் வருவதை தடுத்திடும் வகையில் பள்ளி மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது பள்ளி வளாகத்தை சுற்றி கடைகள் அனைத்தும் கண்காணிக்கப்பட வேண்டும்என அறிவுறுத்தப்படுத்தப்பட்டது.மாணவ மாணவியருடைய உடைமைகளை 1 பைகளை தினம்தோறும் கண்காணித்து சோதனை செய்து தக்க அரவணைப்புடன் வழிகாட்ட ஆலோசனை வழங்கப்பட்டது.தொடர்ந்து பள்ளிக்கு வராமல் இடை நின்ற பதினோராம் வகுப்பு மாணவர்கள்S.பரத் க.கேசவன்ஆகிய இருவரின் இல்லத்திற்குச் சென்று கல்வியின் அவசியம் குறித்து எடுத்துக் கூறி மீண்டும் அந்த மாணவர்களை பள்ளியில் சேர்த்தனர்.
