புற்றுநோய்க்கான வலைத்தளம் உருவாக்கம்

புற்றுநோய்க்கான வலைத்தளம்  உருவாக்கம்
X
கோயம்புத்தூர் சி.எஸ். அகாடமி பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் பிரணவ் இளங்கோ மற்றும் கௌதம் ஆனந்த் இருவரும் இணைந்து புதிதாக புற்றுநோய்க்கான வலைத்தளத்தை உருவாக்கியுள்ளனர்.
கோயம்புத்தூர் சி.எஸ். அகாடமி பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் பிரணவ் இளங்கோ மற்றும் கௌதம் ஆனந்த் இருவரும் இணைந்து புதிதாக புற்றுநோய்க்கான வலைத்தளத்தை உருவாக்கியுள்ளனர். இதுமட்டுமல்லாது பள்ளியில் படிக்கும் போதே பயோ கிளப் என்ற அமைப்பை துவங்கி அதன் வாயிலாக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அரசு வழங்கும் புற்றுநோய்க்கான நிதி உதவித் திட்டங்களை பட்டியலிட்டு கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு புற்றுநோய் தரவுகளின் அடிப்படையில் சென்னையில் உள்ள அடையார் புற்றுநோய் மையத்திலிருந்து தங்கள் வலைத்தளத்திற்கு புற்றுநோய் தரவைப் பெற்று பொதுமக்களிடையே அந்த தகவல்களின் அடிப்படையில் விழிப்புணர்வாக ஏற்படுத்துவருகின்றனர் . மேலும் கூகுள் வரைபடங்களை அடிப்படையாகக் கொண்டு அதன் மூலம் ஆன்லைனில் பொதுமக்கள் தாங்களே எளிதாக மருத்துவமனைகளை கண்டறிந்து பரிசோதனை மற்றும் ஆலோசனை பெரும் வசதிகளை செய்துள்ளனர். புற்றுநோய் பற்றிய அடிப்படைகள் கட்டுரை, புற்றுநோய் தொடர்பான உண்மைகளைப் பற்றி மக்களுக்குக் கற்பிக்க தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து அதில் புற்றுநோய் அதிகம் உள்ள மாவட்டங்களான கோயம்புத்தூர், ஈரோடு, கரூர் , திருப்பூர், சேலம், திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் தன்னார்வ மாணவர்களை தனது அமைப்பில் இணைத்து, கிளைகள்மூலமாக தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர் . இந்த வலைத்தளத்தில் இதுவரை அதிகமான பயனர்கள் பயனடைந்து உள்ளனர். இதை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவரான ஒரு தலைவர் இருக்கிறார். இது முழுக்க முழுக்க மாணவர்களால் நடத்தப்படும் திட்டம். தமிழ்நாட்டில் புற்றுநோய் பற்றிய தவறான நம்பிக்கைகள் மற்றும் கட்டுக்கதைகளை அகற்றுவதே இந்த திட்டத்தின் குறிக்கோள். தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய பிறகு, மாணவர்கள் தலைமையிலான அதே மாதிரி வழியாக மற்ற மாநிலங்களுக்கும் விரிவடைய ஆவலுடன் உள்ளனர்.
Next Story