டூவீலரில் சாலையை கடந்த நபர் மீது, அரசு சொகுசு பேருந்து, லாரி ஏறியதில் உடல்நசுங்கி பலி

X
Komarapalayam King 24x7 |4 Nov 2025 8:05 PM ISTகுமாரபாளையம் அருகே டூவீலரில் சாலையை கடந்த நபர் மீது, அரசு சொகுசு பேருந்து, லாரி ஏறியதில் உடல்நசுங்கி பலியானார்.
குமாரபாளையம் அருகே ஆலாங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம், 48. விசைத்தறி லீசுக்கு எடுத்து தொழில் செய்து வருகிறார். நேற்று பகல் 11:40 மணியளவில் பல்லக்காபாளையம் செங்கமா முனியப்பன் கோவிலில் சுவாமி கும்பிட்டு விட்டு, வீட்டுக்கு திரும்பிகே கொண்டிருந்தார். அப்போது பல்லக்காபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலையில், தனது ப்ளசர் என்ற டூவீலரில் சாலையை கடந்தார். அப்போது வேகமாக வந்த அரசு சொகுசு பேருந்து இவர் வந்த வாகனம் மீது மோதியதில் இவர் தூக்கி வீசப்பட்டு, மறுபுறம் உள்ள சாலையில் விழுந்தார். அப்போது, அவ்வழியாக வந்த லாரி இவரது உடல் மீது ஏறி சென்றது. இதனால் இரண்டு கால்களும் நசுங்கின. குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். ஆனால் சிறிது நேரத்தில் இவர் உயிரிழந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
