ஆதரவற்ற முதியவர் உடலை நல்லடக்கம் செய்த பாசம் அமைப்பினர்

X
Komarapalayam King 24x7 |5 Nov 2025 5:26 PM ISTகுமாரபாளையத்தில் ஆதரவற்ற முதியவர் உடலை பாசம் அமைப்பினர் நல்லடக்கம் செய்தனர்.
குமாரபாளையம் ராஜம் தியேட்டர் எதிரில் எருமைக்காட்டுத் துறையில் வசித்து வந்தவர் முத்துசாமி, 78. இவருக்கு யாரும் இல்லாததால், தனியாக வாழ்ந்து வந்தார். சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இதுபற்றி அக்கம் பக்கம் உள்ளவர்கள் பாசம் பொதுநல அமைப்பினர் வசம் தெரிவித்தனர். நேரில் சென்ற பாசம் அமைப்பினர் முதியவரை நேற்றுமுன்தினம் மாலை 04:00 மணியளவில் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் இவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 05:00 மணியளவில் உயிரிழந்தார்., இவரை பாசம் அமைப்பினர் குமாரபாளையம் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர். பாசம் அமைப்பின் நிர்வாகி குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story
