வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்யும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.
NAMAKKAL KING 24X7 B |5 Nov 2025 7:05 PM ISTநாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்யும் பணியினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி. வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்யும் பணியினை பார்வையிட்டு. ஆய்வு மேற்கொண்டு. வாக்காளர்களுக்கு படிவத்தினை வழங்கினார்.இந்திய அரசியலமைப்பின் 324-வது பிரிவு மற்றும் 1950 ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 21 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம். 1950-ன் பிற பொருத்தக்கூடிய பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, 01.01.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தினை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.உள்ளனர். ஒவ்வாரு நாமக்கல் மாவட்டத்தில் 1629 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்களுக்கு 10வாக்குச்சாவடிகள் வீதம் மொத்தம் 165 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. BLO, BLO Supervisor & BLA-களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து. 04.11.2025 முதல் டிசம்பர் 04, 2025 வரை வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் விநியோகம் மற்றும் கணக்கடுப்பு பணிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் இன்றைய தினம் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சியர் நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லத்துவாடி, சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குபட்ட சேந்தமங்கலம், வளையபட்டி, உத்தரகிடிகாவல் மற்றும் இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டியம்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்யும் பணியினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, வாக்காளர்களுக்கு படிவத்தினை வழங்கினார்.
Next Story



