மெய்ஞான தியான மண்டபம் திறப்பு மற்றும் யாக சாலை பூஜைகள்

X
Komarapalayam King 24x7 |5 Nov 2025 7:38 PM ISTகுமாரபாளையம் அருகே சத்தியத்தின் சக்தி நிலை சங்க, மெய்ஞான தியான மண்டபம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தது.
குமாரபாளையம் அருகே சத்தியத்தின் சக்தி நிலை சங்க, மெய்ஞான தியான மண்டபம் புதுப்பிக்கப்பட்டு, திறப்பு விழா மற்றும் ஐப்பசி பவுர்ணமியையொட்டி சிறப்பு யாக வழிபாடு நடத்தப்பட்டது. மகரிஷியின் அருளாசியுடன் நடந்த யாகத்தில் சித்தர்கள், மகரிஷிகள், முனிவர்கள் பெயர்கள் எல்லாம் சொல்லி நெய் வார்த்து யாகம் நடந்தது. தியான மையத்தின் நிர்வாகி மதிவாணன் யாகத்தை நடத்தினார். பல ஊர்களிலிருந்து பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர். மதிவாணன் கூறியதாவது: தியானம் செய்வது குறித்தும், அதன் மகத்துவம் குறித்தும் பக்தர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தியானம் செய்வதன் மூலமாக நமது உடலையும், மனதையும், ஆன்மாவையும் புனிதப்படுத்தி, மெய்ஞான ஆன்மாவாக ஆக்க வேண்டும் அதுதான் மனித பிறவியின் லட்சியம். அதை அடைய அனைவரும் தியானம் செய்ய வேண்டும். தியானம் செய்து நமது உயிரை, ஆன்மாவை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் மெய்ஞான தியானப் பயிற்சி பொறுப்பாளர் ராஜாமணி பங்கேற்று, பக்தர்களுக்கு மகரிஷி ஈஸ்வர பட்டரின் அருளுடன் அருளாசி வழங்கினார். பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
