பஸ் ஸ்டாண்டில் இட பற்றாக்குறை தேவையற்ற பொருட்கள் அகற்ற கோரிக்கை

X
Komarapalayam King 24x7 |6 Nov 2025 6:34 PM ISTகுமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் இடப் பற்றாக்குறை காரணமாக தேவையற்ற பொருட்கள் அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது
குமாரபாளையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் சார்பில், 738 லட்சம் மதிப்பில் , பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. 2023, நவ. 30ல், பணி உத்திரவு பிறப்பிக்கப்பட்டு, 2024, பிப். 15ல் பணிகள் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டன. 12 மாதங்களில் பணிகள் முடிவடையும் என, கால நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை உள்ளிட்ட சில காரணங்களால், பணிகளில் கால தாமதம் ஏற்பட்டு, தற்போது, கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. தற்போது செயல்பட்டு வரும் தற்காலிக பஸ் ஸ்டாண்டில், போதுமான இடவசதி இல்லாமல், பொதுமக்கள், அங்குள்ள கடையினர், பேருந்து ஓட்டுனர் ஆகியோர் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். பஸ் ஸ்டாண்டில் போதிய இடவசதி இல்லாததால், பேருந்துகள் பஸ் ஸ்டாண்ட்க்கு வெளியில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் பேருந்திற்காக காத்திருக்கும் பொதுமக்கள் நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் போலீஸ் ஸ்டேஷன் கூண்டு, தனியார் அமைப்பினரின் சேதமான கூடம், உள்ளிட்டவைகள் பொதுமக்கள் நிற்பதற்கு கூட இடையூறாக உள்ளது. இதனை அகற்றி பொதுமக்கள் எளிதாக நின்று பேருந்து ஏறவும், இறங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் கட்டுமான பணிகள் முடித்து, புதிய பஸ் ஸ்டாண்ட் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
