நெற்பயிரில் இலைசுருட்டு நோய் தாக்குதல் விவசாயிகள் கவலை

நெற்பயிரில் இலைசுருட்டு நோய் தாக்குதல் விவசாயிகள் கவலை
X
குமாரபாளையம் அருகே நெற்பயிரில் இலைசுருட்டு நோய் தாக்குதல் ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை கொண்டுள்ளனர்.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் நெல் பயிரிட்டுள்ளனர். நடவு நட்ட சில தினங்களில் பயிர்களில் இலை சுருட்டல் நோய் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வேளாண்மை உதவி அலுவலர் மாயஜோதி நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். இவர் கூறியதாவது: இந்த பகுதியில் இல்லை சுருட்டு நோய் தாக்கியுள்ளது. இது சூரிய ஒளிச்சேர்க்கை நடக்காத வண்ணம் தடுக்கும். வான மேக மூட்டம், மரத்தின் நிழல் பகுதி ஆகியற்றால் இத தாக்குதல் அதிகம் இருக்கும். இதற்காக வேப்பங்கொட்டை கரைசல் போதுமானது. சில இடங்களில் தண்டு துளைப்பான் தாக்குதலும் உள்ளது. இரண்டிற்கும் பொதுவான பூச்சி மருந்து பயன்படுத்தினால் போதும். இதற்காக விவசாயிகள் அச்சம் கொள்ள வேண்டாம். மழைக்காலம், மேக மூட்டம் காலம் முடிந்து வெயில் காலம் வந்தால் எல்லாம் சரியாகி விடும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story