குமாரபாளையத்தில் சாலையில் முளைத்த புதிய கோவிலால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது

X
Komarapalayam King 24x7 |7 Nov 2025 6:08 PM ISTசாலையில் முளைத்த புதிய கோவிலால் போக்குவரத்து இடையூறு
. குமாரபாளையம் ராஜா வீதி, காளியம்மன் கோவில் அருகே நகராட்சி மண்டபம் மற்றும் காவிரி ஆற்றுக்கு போகும் வழியில், குறுகிய சாலையோரமாக திடீரென்று புதிய கோவில் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது. இதன் அருகில் மிகவும் பிரசித்தி பெற்ற அனைத்து சமூக காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் மகா குண்டம் ஆண்டுதோறும் மாசி மாதம் நடப்பது வழக்கம். சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கும் இந்த விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடுவார்கள். இந்த சாலையின் வழியாகத்தான் தேரோட்டம் இரண்டு நாட்கள் நடக்கும். ஏற்கனவே ஆக்கிரமிப்புகளால் இந்த சாலை குறுகிய சாலையாக ஆன நிலையில், இந்த கோவிலால், தேரோட்டம் நடைபெற பெரும் இடையூறாக இருக்கும். இந்த குறுகிய சாலை வழியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேரோட்டம் நடக்கும் போது, போதிய இடவசதி இல்லாமல், தேர் சாய்ந்து ஒருவர் பலியானதுடன், பலர் காயமடைந்தனர். தற்போது இந்த திடீர் கோவிலால் அதே நிலை மீண்டும் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. மீண்டும் அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த கோவில் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
