நவோதயா பள்ளி மாணவர்கள் கொங்கு சகோதயா ஜூடோபோட்டியில் மாபெரும் சாதனை வெற்றி.

X
NAMAKKAL KING 24X7 B |7 Nov 2025 7:01 PM ISTகொங்கு மண்டலத்தில் இயங்கி வரும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களின் தனித்திறனையும், விளையாட்டு திறமையை வளர்க்கவும்,கல்வியோடு தொடர்புடைய பல திறமைகளை வளர்த்தெடுக்கவும், கொங்கு சகோதயா அன்ற மாபெரும் கூட்டமைப்பு கடந்த பத்து ஆண்டுளுக்கு மேலாக இயங்கி வருகின்றது.
கடந்த வாரம்,கரூர் பரணி பார்க் பப்ளிக் பள்ளியில் ஜூடோ போட்டி பல்வேறு வயது பிரிவில் தனித்தனியாக நடைபெற்றது. அதில் சேலம், கிருஸ்ணகிரி, நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சை என பல்வேறு மாவட்டங்களில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டார்கள். அதில் நமது நவோதயா பள்ளியில் இருந்த 26மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு ஒட்டு மொத்த சாம்பியனாக இரண்டாம் இடம் பிடித்து கோப்பையை வென்றுள்ளனர்.மாணவர் லோகேஷ், தரண்ஸ்ரீ, சஞ்சீவன், மாணவி ஹன்சிகா, நிவி ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர், மேலும் மாணவர்கள் சந்தோஸ், ஹரிகரன், சூரியபிரகாஷ் ஆகியோர். வெள்ளி பதக்கம் பெற்று வெற்றி பெற்றனர். ஹரிஸ்பிரனவ் விசாந், சரண், கமலேஸ், ஸ்ரீதர்சன், அபிகிருத்திக் ஜந்தாம் வகுப்ப மாணவர் கதிக்சன் ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்றுள்ளனர். பள்ளியில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில் அனைவருக்கும் சான்றிதழ், மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. பள்ளியின் பொருளாளர் தேனருவி போட்டியில் கலந்துகொண்டவர்கள், வெற்றி பெற்றவர்கள், ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்கள், பள்ளியின் ஜூடோ பயிற்சியாளர்உடற்கல்வி ஆசிரியர்கள்அனைவருக்கும் நன்றி தெரிவித்து வாழ்த்துக்களைக்கூறினார். பள்ளியின் முதல்வர், இருபால் ஆசிரியர்கள், சகமாணவ மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற்றவர்களை வெகுவாக பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டர்கள்.
Next Story
