நவோதயா பள்ளியில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்.

நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் வியாழக்கிழமை மதியம் 2.00 மணியளவில் நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் குற்றப்பிரிவு அலுவலகம் சார்பாக மாணவர்கள், மாணவிகள் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் பள்ளி கலையரங்கில் நடத்தப்பட்டது.
விழிப்புணர்வு கருத்தரங்கத்திற்கு பள்ளியின் பொருளாளர் கா. தேனருவி தலைமைஏற்றார் தலைமை உரையில் அவர் பேசுகையில் “இன்றைய மாணவச் சமுதாயம் செல்போனில் தன்னுடைய எதிர்காலத்தையே தொலைத்துவிடுகின்றார்கள். செல்போனை நீங்கள் பார்க்கவில்லை உங்களை செல்போன் கவனித்துக்கொண்டிருக்கின்றது. நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கதை ஏற்படுத்திக்கொண்டால் மாணவர்களின் எதிர்காலம் நன்றாக அமையும் என்று கூறினார்” சிறப்பு விருந்தினராக டாக்டர் ஆர். விஜயராகவன் (நாமக்கல் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சைபர் கிரைம்பிரிவு) அவர்கள் பேசுகையில் சமூக ஊடங்களான வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம். ஆகியவற்றின்; வழியாக எப்படி குற்றங்கள் நடைபெறுகிறது. அதில் மாணவர்கள் எப்படி ஈடுபடுத்தப்படுகிறார்கள், அதில் இருந்து மீண்டு வருவதற்குறிய வழிகள் என்ன? செல்போனை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் எதை செய்ய வெண்டும் எதை செய்யக் கூடாது என்று மிகவும் விளக்கமாகவும், தெளிவாகவும் விளக்கினார். மேலும் நாமக்கல் மாவட்ட சைபர்கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் னு.ரோஸ்லின் அந்தோணியம்மாள் அவர்கள் பேசுகையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் செல்போனோடு இருக்கும் போது எந்தெந்த வியசங்களை கவனிக்கவேண்டும். பெற்றோர்கள் முன்னிலையில் செல்போன் பார்க்க அனுமதிக்கவேண்டும். என்றும் சமூக ஊடங்களால் இன்றைக்கு பெண்கள் எப்படி பாதிப்படைகின்றார்கள், பெண்குழந்தைகள் எப்படி பாதிப்படைகின்றார்கள் என்பது குறித்தும் கல்விக்கடன் என்ற பெயரில் பெற்றோரும், மாணவர்களும் எப்படி ஏமாற்றப்படுகிறார்;கள் என்பது குறித்தும் தெளிவாகவும், எளிமையாவும் நடைமுறையில் ஏற்படும் குற்றங்கள் குறித்த அனுபவத்தோடும்,ஒருநாளைக்கு எவ்வளவு நபர்கள் எந்தெந்த வகையில் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை அனுபவபூர்வமாக விளக்கினார். நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளி முதல்வர் அவர்கள் நன்றியரை கூறினார் பெற்றோர்கள், மாணவர்கள் இணைய வழியாக நடைபெறும் குற்றங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்டு விழிப்புணர்வோடு மகிழ்ச்சியாக சென்றனர்.
Next Story