நாமக்கல்: சின்னமுதலைப்பட்டி,காமராஜர் நகரில் சிறுவர் பூங்கா! -கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி திறந்து வைத்தார்!

பூங்காவை பொதுமக்கள் தூய்மையாக பராமரித்து, உடல் மற்றும் உள்ள ஆரோக்கியத்துடன் தினமும் பயன்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி வேண்டுகோள்
நாமக்கல் மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட சின்ன முதலைப்பட்டி, காமராஜர் நகரில், 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி திறந்து வைத்தார்.மாநகராட்சி மேயர் து.கலாநிதி, துணை மேயர் செ.பூபதி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக நாமக்கல் மாநகராட்சி வார்டு எண் 5 மாமன்ற உறுப்பினர் மா.கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ்,, சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த பூங்காவில், சிறியவர்கள், பெரியவர்கள் நடை பயிற்சி செய்ய நடைமேடை,சிறுவர்கள் விளையாடுவதற்கான சறுக்கல்,ஊஞ்சல், சீ-சா, சிறு ராட்டினம், பொம்மை விளையாட்டுகள் உள்ளிட்ட வசதி உள்ளது. மற்றும் அனைவரும் உடற்பயிற்சி செய்வதற்கான ஜிம் வசதியும் இந்த பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அமர்ந்து ஓய்வெடுப்பதற்கான இருக்கைகள் உள்ளன. காலை 5:30 மணி முதல் காலை 9:00 மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் இந்த பூங்கா திறந்திருக்கும். குடிநீர் வசதி, ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு தனித்தனியே கழிப்பிடமும் அமைக்கப்பட்டுள்ளது.பூங்காவில் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.பின்னர்
நிகழ்ச்சியில் பேசிய பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி..
கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2024-25 ன் கீழ் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள், நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இங்கு அமைக்கப்பட்டுள்ள நடைமேடை விளையாட்டு உபகரணங்கள் உடற்பயிற்சி அரங்கு ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பூங்காவை பொதுமக்கள் தூய்மையாக பராமரித்து, உடல் மற்றும் உள்ள ஆரோக்கியத்துடன் தினமும் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இது போன்ற பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். என்.ராஜேஸ்குமார் எம்பி கேட்டுக் கொண்டார். பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களையும், வசதிகளையும் சிறுவர்-சிறுமிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்தோடு விளையாடி மகிழ்ந்தனர்.இந்த நிகழ்ச்சியில், திமுக நாமக்கல் நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவக்குமார், நாமக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Next Story