அரசுத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார் சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் மு.ஆசியா மரியம்.

X
NAMAKKAL KING 24X7 B |7 Nov 2025 8:52 PM ISTஅனைத்து துறை அலுவலர்களும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் மு.ஆசியா மரியம், அரசுத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் மு.ஆசியா மரியம், தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன் முன்னிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் மு.ஆசியா மரியம், தெரிவித்ததாவது,தமிழ்நாடு முதலமைச்சர் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்திரவிட்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் இன்றைய தினம் நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகளும், ஜேசிபி இயந்திரங்களும், ஜெனரேட்டர்களும், மீட்பு படகுகள், அவசர சிகிச்சை வாகனங்களும், ஆக்சிஜன் உருளைகளும் உள்ளிட்ட உபகரணங்கள்/ இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக்கூடங்கள், பிற கட்டிடங்களும் நிவாரண முகாம்கள் அமைப்பதற்காக இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை குழு, தேடுதல் மற்றும் மீட்புக் குழு, நிவாரண முகாம்கள் மேலாண்மை குழு, பொது சுகாதார குழு, ஊடக மேலாண்மை, நெடுஞ்சாலை பணிகள் சார்ந்த குழுக்கள் அமைத்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்படும். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த காலங்களில் பெய்த மழையின் அடிப்படையில் அதிகளவில் பாதிப்பிற்குள்ளாகும் (High Vulnerable) இடங்களாக 2 இடங்கள், மிதமாக பாதிப்பிற்குள்ளாகும் (Medium Vulnerable) இடங்களாக 30 இடங்கள், குறைவாக பாதிப்பிற்குள்ளாகும் (Low Vulnerable) 1 இடம் என மொத்தம் 33 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேற்படி, கனமழையின் காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் என அடையாளம் காணப்பட்ட இடங்களில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள முதல் பொறுப்பாளர்களாக (First Responders) நாமக்கல் மாவட்டத்தில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் உள்ள நியாய விலை கடைகளில் தேவையான அளவு உணவு பொருட்கள் இருப்பு வைக்க வேண்டும். நீர்வளத்துறை நீர் நிலைகளின் மூலம் வரப்பெறும் நீர் அளவுகளை கண்காணிக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினர் மழையினால் சேதமடையும் சாலைகளை உடனடியாக சீர்செய்து சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டும். வனத்துறை சார்ந்த அலுவலர்கள் வனப்பகுதியில் மழை பொழிவின் காரணமாக ஏதேனும் நிலச்சரிவு ஏற்பட்டால் அது குறித்த தகவல்களை உடனடியாக தலைமையிடத்திற்கு தெரிவிக்க வேண்டும். சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலம் தேவையான அளவு மருந்து இருப்பு வைத்திருக்க வேண்டும். மேலும், மருத்துவ முகாம்கள் நடத்திட மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறையின் மூலம் பள்ளி வளாகங்களில் செயல்படாத கட்டடங்களுக்கு அருகில் மாணவர்கள் செல்லாமல் இருக்க அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும். பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவ, மாணவியர்களுக்கு மழை அளவு, மழை காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள், TNSMART செயலி குறித்த தகவல்கள், 1077 கட்டணம் இல்லா தொலைபேசி எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், போக்குவரத்து துறை சார்பில் பேருந்துகள், கார்கள் மற்றும் அவசர ஊர்திகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம், மின்சார வாரியம், காவல்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட துறைகள் சார்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பேரூராட்சிகள் மூலம் முகாம்கள் நடத்தப்பட்டு காய்ச்சல் கண்டறியப்பட்டால் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தினசரி சந்தை, நீர் தேங்கும் இடங்களில் கிருமி நாசினிகள் தெளித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். காய்ச்சல் கண்டறியப்பட்ட இடங்களில் உடனடியாக முகாம்கள் நடத்தப்பட வேண்டும். கிருமி நாசினி தெளித்து சுத்தமாக பராமரிக்க வேண்டும். மேலும், அனைத்து துறை அலுவலர்களும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். மேலும், வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பேரிடர் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் உடனுக்குடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மூலம் 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்கள் TNSMART என்ற செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து மழைகுறித்த பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் மு.ஆசியா மரியம், தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் க.பா.அருளரசு, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் வே.சாந்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
