தேசிய உணவுப்பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் கீழ் சிறுதானிய உணவு திருவிழாவினை தொடங்கி வைத்த அமைச்சர் மா மதிவேந்தன் மற்றும் எம்.பி கே.ஆர்.அண்ட் ராஜேஷ்குமார்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மற்றும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் ஆகியோர் வேளாண்மைத்துறையின் சார்பில், தேசிய உணவுப்பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் கீழ்
சிறுதானிய உணவு திருவிழாவினை தொடங்கி வைத்தார்கள்‌. நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் இன்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மற்றும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் ஆகியோர் வேளாண்மைத்துறையின் சார்பில், தேசிய உணவுப்பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் - ஊட்டமிகு சிறுதானியங்கள் திட்டத்தின் கீழ் சிறுதானிய உணவு திருவிழாவினை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் , மேயர் து.கலாநிதி ஆகியோர் முன்னிலையில், தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய தினம் வேளாண்மைத்துறையின் சார்பில், தேசிய உணவுப்பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் - ஊட்டமிகு சிறுதானியங்கள் திட்டத்தின் கீழ் சிறுதானிய உணவு திருவிழா தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிறுதானியங்கள் 962713 ஹெக்டர் பரப்பளவிலும், 3528104 மெட்ரிக்டன் உற்பத்தியும், 3665 கிலோ/ ஹெக்டர் உற்பத்தி திறன் கொண்டதாகவும், நாமக்கல் மாவட்டத்தில் சிறுதானியங்கள் 88238 ஹெக்டர் பரப்பளவிலும், 158144 மெட்ரிக்டன் உற்பத்தியும், 1792 கிலோ/ ஹெக்டர் உற்பத்தி திறன் கொண்டதாகவும் உள்ளது. சிறுதானியங்கள் சாகுபடி பரப்பில் நாமக்கல் மாவட்டம் மாநிலத்தில் இரண்டாவது இடத்திலும், சோளம் சாகுபடி பரப்பில் நாமக்கல் மாவட்டம் மாநிலத்தில் முதலிடத்திலும் உள்ளது. சிறுதானியங்களான சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, வரகு மற்றும் பனிவரகு ஆகியவற்றின் சாகுபடியினை ஊக்குவிக்கவும் பரப்பு மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், தேசிய உணவுப்பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் - ஊட்டமிகு சிறுதானியங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரிசி மற்றும் கோதுமையை விட சிறுதானியங்களில் அதிகளவு புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ரிபோபுளோவின், நியாசின் ஆகிய வைட்டமின்களும் , தாது உப்புகளும் மற்றும் பல உயிர்ச்சத்துக்களும் உள்ளன. அனைத்து மக்களும் சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு பெறவும், சிறுதானியங்களின் ஊட்டச்சத்துக்களை தெரிந்துக்கொள்ளவும், சிறுதானிய உணவு உட்கொள்வதை அதிகப்படுத்தும் நோக்கத்திலும் சிறுதானிய உணவுத்திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறுதானிய திருவிழாவில் 50-க்கு மேற்பட்ட சிறுதானிய உணவுகள் மற்றும் சிற்றுண்டிகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவாக சிறுதானிய உணவுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மக்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டு, மீண்டும் சிறுதானிய உணவுகளை உண்ண ஆரம்பித்துள்ளனர். விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே சிறுதானிய வகைகள் குறித்து மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சிறுதானிய வகைகளை நேரடியாகப் பயன்படுத்தாமல், அவற்றைப் பாதுகாத்தல், சமைத்தல், கெட்டுப்போகாமல் பார்த்துக் கொள்ளுதல் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எளிதாகக் கிடைக்கச் செய்தல் போன்ற பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களை மேம்படுத்துவதே உணவு பதப்படுத்துதல் ஆகும். அந்த வகையில் சிறுதானியங்களை மதிப்புக்கூட்டப்பட்டு, அவல், சேமியா போன்ற பொருட்களாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் மக்களிடையே சிறுதானியங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பெயர் தான் சிறுதானியம். ஆனால் அதன் பலனோ மிக்பெரியது. தமிழ்நாடு முதலமைச்சர் சிறுதானிய உற்பத்திக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் வழங்கி வருகிறார்கள். நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரை கடந்த 4 ஆண்டுகளில் வேளாண்மைத்துறைக்கென பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. போதமலையில் தினை, வரகு, சாமை உள்ளிட்ட பல்வேறு சிறுதானியங்கள் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. மக்கள் எளிதாக உண்ணும் வகையில் மதிப்பு கூட்டு பொருளாக விற்பனை செய்யப்படுகிறது. அதற்காக போதமலையில் போக்குவரத்து என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. ரூ.139.65 கோடி மதிப்பீட்டில், 31 கிலோ மீட்டர் நீளத்திற்கு போதமலையில் சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சிறுதானியங்களை சந்தைப்படுத்தும் பொழுது அதன் உற்பத்தி மேலும் உயரும். எத்தனால் ஆலையின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் பொருட்டு ரூ.6.67 கோடி செலவில் நாமக்கல் மாவட்டம், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தி அலகு மேம்படுத்தும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆலையின் உற்பத்தி திறன் நாள் ஒன்றுக்கு 30,000 லிட்டரிலிருந்து 50,000 லிட்டராக அதிகரிக்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு, பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் நலன் கருதி, மோனூர் சாலை லத்துவாடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய 2.0 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தானியங்கி நவீன பால்பண்ணை ரூ.90.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் திறப்பு விழாகாண இருக்கிறது என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்தார்.தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மற்றும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு மானிய திட்டங்கள் குறித்த அமைக்கப்பட்ட கருத்துக்காட்சியினை பார்வையிட்டு, 32 விவசாயிகளுக்கு, ரூ.60,000 மதிப்பீட்டில் மானிய விலையில் இடுபொருட்களை வழங்கினார்கள். தொடர்ந்து, வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் முனைவர் எஸ்.அழகுதுரை (உழவியல்), பேராசிரியர் மற்றும் தலைவர் (வேளாண் அறிவியல் நிலையம் சந்தியூர், சேலம்) முனைவர். ஆர்.ஜெகதாம்மாள், பி.ஜி.பி வேளாண் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் முனைவர் ஆர்.தாரணி (உணவு அறிவியல் (ம) ஊட்டச்சத்து), முனைவர் கே.பிருந்தா (உழவியல்) ஆகியோர் சிறுதானியம் குறித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கருத்துரைகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில், துணை மேயர் செ.பூபதி, மாமன்ற உறுப்பினர் ஜெயமணி, வேளாண்மை இணை இயக்குநர் சு.மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கா.இராமச்சந்திரன், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) வி.மணிமேகலாதேவி உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Next Story