ராசிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வாக்கு சாவடி முகவர் கூட்டம் எம்பி... அமைச்சர்... ஆலோசனை வழங்கினார்கள்

ராசிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வாக்கு சாவடி முகவர் கூட்டம்  எம்பி...  அமைச்சர்... ஆலோசனை வழங்கினார்கள்
X
ராசிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வாக்கு சாவடி முகவர் கூட்டம் எம்பி... அமைச்சர்... ஆலோசனை வழங்கினார்கள்
ராசிபுரத்தில் 'என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி' அடிப்படையில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வாக்கு சாவடி முகவர்கள் (BLA2), பூத் டிஜிட்டல் ஏஜெண்ட் (BDA) ஆலோசனை மற்றும் பயிற்சி கூட்டம் மாவட்ட கழக செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் முன்னிலையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு SIR வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தேர்தல் பணிகள் குறித்தும் பூத் வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் மற்றும் கழக ஆட்சியில் நாமக்கல் மாவட்டம் பெற்றுள்ள திட்டங்கள் குறித்தும் ஆலோசனை வழங்கி பேசினா்... மேலும் எம்பி ராஜேஷ்குமார் பேசும் போது.... தலைமைக் கழகம் அறிவித்திருந்தது போல பாக முகவர்கள் மிகவும் பொறுப்புடனும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பாஜக மறைமுகமாக தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலை திருத்தத்தினை கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் தற்போது பல்வேறு திருவிழாக்கள் நடைபெற துவங்கும் காலகட்டத்தில் வாக்காளர் திருத்தம் என்று கொண்டு வந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பீகாரில் சிறுபான்மையினர் வாக்குகளையும் தொலைதூரத்தில் உள்ளவர்களையும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கி உள்ளார்கள். தமிழகத்தில் அரசியல் திட்டங்களை பயணம் பெரும் பெண்கள் கட்டாயமாக திமுகவிற்கு வாக்களிப்பார்கள் அது பாஜகவிற்கு விழாது. வாக்காளர் பட்டியலில் யார் பெயரும் விடாமல் மீண்டும் சேர்ப்பது திமுக பி.எல்.ஏ 2 பொறுப்பாளர்களின் கடமையாகும். இறந்தவர்கள் வெளியூர் வெளிமாநிலங்கள் சென்றவர்கள் இரண்டு இடத்தில் பெயர்கள் உள்ளவர்கள் உள்ளிட்டவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிடுவார்கள். தகுதியுள்ள வாக்காளர்கள் பெயர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு படிவங்கள் தருவார்கள் ஒன்றை நிரப்பி கொடுத்துவிட்டு அதே போல மற்றொன்றிலும் நிரப்பி அதிகாரிகளிடம் கையொப்பம் பெற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் நமக்கு அத்தாச்சி பெயர்கள் விடுபட்டால் மீண்டும் சேர்த்துக் கொள்ள அந்த ப டிவத்தினை பயன்படுத்தி கொள்ளலாம். அதிகாரிகள் கணக்கெடுக்க வீடு விடாக செல்லும்போது அந்தந்த பகுதி பி எல் ஏ 2 முகவர்கள் உடன் சென்று அவர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். வாக்காளர் பட்டியலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெயர்கள் சில இடங்களில் மாறி உள்ளது அவை தற்போது கணக்கெடுக்க வரும்போது முறையாக எழுதிக் கொடுத்து சரி செய்து கொள்ள வேண்டும்.‌ இப்போது அதனை அதிகாரிகளே சரி செய்து விடுவார்கள். அதற்கான படிவங்களும் உள்ளன அவைகளில் எழுதி கொடுத்து சரி செய்து கொள்ளலாம். பெயர் திருத்தம் முகவரி மாற்றம் உள்ளிட்ட சில பணிகளையும் அதற்க்கு உண்டான படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தால் சரி செய்து விடுவார்கள். என்றார்.. இந்நிகழ்வில் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் நன்னீயூர் ராஜேந்திரன், நகர கழக செயலாளர் சங்கர், ஒன்றிய கழக செயலாளர்கள் ராமசுவாமி, ஜெகநாதன், துரைசாமி,பேரூர் கழக செயலாளர்கள் கண்ணன்,ஜெயக்குமார், நல்லதம்பி, சுப்ரமணி, ராஜேஸ், சார்பு அணி நிர்வாகிகள் ,மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பூத் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story