பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட சிறுபான்மையினர் நல ஆணையர் மு.ஆசியா மரியம்.
NAMAKKAL KING 24X7 B |8 Nov 2025 5:16 PM ISTநாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சிறுபான்மையினர் நல ஆணையர் மு.ஆசியா மரியம், குமாரபாளையம், திருச்செங்கோடு நகராட்சி, பள்ளிபாளையம், திருச்செங்கோடு, எலச்சிபாளையம் ஒன்றியங்கள் மற்றும் ஆலாம்பாளையம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை
ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், திருச்செங்கோடு நகராட்சி, பள்ளிபாளையம், திருச்செங்கோடு, எலச்சிபாளையம் ஒன்றியங்கள் மற்றும் ஆலாம்பாளையம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் 07.11.2025 அன்று நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சிறுபான்மையினர் நல ஆணையர் மு.ஆசியா மரியம், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை, நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சிறுபான்மையினர் நல ஆணையர் மு.ஆசியா மரியம், குமாரபாளையம் நகராட்சி, கிழக்கு காவேரி நகர், ராஜராஜன் நகர், காந்திபுரம், திருவள்ளுர் தெரு, இந்திரா தெரு, சுள்ளிமடை தோட்டம் கிராஸ், தெலுங்கு மாரியம்மன் கோவில், சுண்ணாம்பு சூளை உள்ளிட்ட சாலைகளை தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.74.00 இலட்சம் மதிப்பீட்டில் இணைக்கும் பணியினையும், பள்ளிபாளையம் ஒன்றியம், வட்டமலை கோவில் தட்டான்குட்டை பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.24.51 இலட்சம் மதிப்பீட்டில் சாலை பலப்படுத்தும் பணியினையும், தட்டான்குட்டை ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் 21 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், ஈரோடு சங்ககிரி மெயின் சாலை முதல் மக்கிரிபாளையம் சாலை வரை ரூ24.27 இலட்சம் மதிப்பீட்டில் சாலை பலப்படுத்தும் பணியினையும், ஆலாம்பாளையம் பேரூராட்சியில் நகர்ப்புற சாலை உட்கட்டமைப்புத் திட்டத்தின்கீழ் ரூ.71.50 இலட்சம் மதிப்பீட்டில் கரட்டான்காடு பசுமைநகர், அலமேடு, கொங்குநகர் ஆகிய சாலைகளில் ரூ.71.50 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதையும், ஆயக்காட்டூர், பேரூராட்சி சமுதாய கூடம், கொரக்காட்டுபள்ளம் ஆகிய சாலைகளை சிறப்புநிதியின்கீழ் ரூ.62.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கும் பணியினையும், திருச்செங்கோடு ஒன்றியம், டி.கவுண்டம்பாளையம் ஊராட்சி அலுவலகம் முதல் காடச்சநல்லூர் ஊராட்சி வரை நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.76.58 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியினையும், திருச்செங்கோடு நகராட்சியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் திருநகர் காலனி, கே.எஸ்.ஆர். லைன் சாலை, பக்தவச்சலம் நகர், பார்க் சாலை, நரிப்பள்ளம் மெயின்ரோடு முதல் டிசிஎம்எஸ் கேம்பஸ், சாணார்பாளையம் நாடார் ரோடு, மாரியம்மன் கோவில் வீதி ஆகிய சாலைகளை இணைக்கும் பணியினையும், சீதாராமபாளையம் பகுதியில் அரசு நிலங்களில் வீடுகள் கட்டி குடியிருப்போரின் ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்தின்கீழ் 64 பட்டா வழங்குதல் தொடர்பாகவும், திருச்செங்கோடு ஒன்றியம் மொளசி சாலை முதல் முனியப்பன் சாலை வரை முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.83.68 இலட்சம் மதிப்பீட்டிலும், கோவில்பாளையம் முதல் கல்லாங்காடு சாலை வரை ரூ.109.44 இலட்சம் மதிப்பீட்டிலும் சாலை அமைக்கும்பணி நடைபெற்று வருவதையும், எலச்சிபாளையம் ஒன்றியம் புள்ளாச்சிபட்டி – குருக்கபுறம் சாலை ரூ.37.83 இலட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் விரைவாகவும், தரமாகவும் முடித்து பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.மேலும், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு நேரடியாக ரேசன் பொருட்கள் வழங்குதல் தொடர்பாக பள்ளிபாளையம், கண்டிபுதூர், குரங்குபுதூர், செங்குந்தபுரம் முதல் வீதி, எலச்சிபாளையம் ஒன்றியம் குமாரமங்கலம் ஆகிய பகுதிகளில் நேரடியாக பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று கலந்துரைடியாடினார். இந்த ஆய்வுகளின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சு.வடிவேல் உட்பட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story



