பெண் மாயம் போலீசார் விசாரணை

X
Komarapalayam King 24x7 |8 Nov 2025 8:27 PM ISTகுமாரபாளையத்தில் பெண் மாயமானதையடுத்து போலீசார் தீவிரமாக விசராணை செய்து வருகிறார்கள்.
குமாரபாளையம் பாரதி நகர் பகுதியை சேந்ர்ந்தவர் சாந்தி, 27. கூலி. இவர் எதிர் வீட்டில் வசிக்கும் வாசுகி என்பவரிடம் பழகி வந்தது, இவரது கணவர் மோகனசுந்தரத்திற்கு பிடிக்கவில்லை. பலமுறை கண்டித்தும் தொடர்ந்து பழகி வந்ததால், ஆத்திரமடைந்து திட்டியுள்ளார். இதனால் கோபித்து கொண்டு அம்மா வீட்டிற்கு செல்வதாக கூறி, வீட்டை விட்டு வெளியில் சென்றார். ஆனால் அம்மா வீட்டிற்கும் போகவில்லை. தனது உறவினர் வீட்டில் இருந்த சாந்தியை, கணவர் நேரில் சந்தித்து அழைத்து வந்தார். நவ. 4ல் வேலைக்கு சென்ற மோகனசுந்தரம், நீண்ட நேரம் ஆகியும் வேலைக்கு வராததால், வீட்டிற்கு வந்து பார்த்தார். ஆனால், சாந்தி வீட்டிலும் இல்லை. இது குறித்து பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சாந்தியை தேடி வருகிறார்கள். --
Next Story
