அதிக விலைக்கு அரசு மது விற்ற பெண் கைது

அதிக விலைக்கு அரசு மது விற்ற பெண் கைது
X
குமாரபாளையம் அறோகே அதிக விலைக்கு அரசு மது விற்றதாக பெண் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம் அருகே அரசு மது பானங்களை அதிக விலைக்கு விற்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி எஸ்.ஐ. சதீஷ் தலைமையிலான போலீசார் நேரில் வந்து ரோந்து பணி மேற்கொண்டனர். தட்டான்குட்டை ஊராட்சி, மூப்பனார் நகரில் வசிக்கும் வளர்மதி, 42, என்பவர், அதிக விலைக்கு அரசு மதுபானங்களை விற்பது தெரியவந்தது. நேரில் சென்ற மதுவிலக்கு போலீசார் வளர்மதியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இவரிடமிருந்த 48 மது பான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story