கமலின் பிறந்த நாளையொட்டி அன்னதானம் வழங்கிய மக்கள் நீதி மய்யத்தினர்

கமலின் பிறந்த நாளையொட்டி அன்னதானம்  வழங்கிய மக்கள் நீதி மய்யத்தினர்
X
குமாரபாளையத்தில் கமலின் பிறந்த நாளையொட்டி மக்கள் நீதி மய்யத்தின் மகளிரணியினர் அன்னதானம் வழங்கினர்.
மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனரும், எம்.பி.யுமான கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி நாமக்கல் மாவட்ட மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் குமாரபாளையம் பாசம் முதியோர் மற்றும் அதரவற்றோர் மையத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட மகளிரணி செயலர் சித்ரா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சேலம் மண்டல செயலர் காமராஜ் பங்கேற்று, அன்னதானம் துவக்கி வைத்தார். அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அனைவரும் கமலுக்கு வாழ்த்து கூறினார்கள். இதில் மாவட்ட துணை அமைப்பாளர் சொர்ணாம்பாள், பள்ளிபாளையம் ஒன்றிய அமைப்பாளர் மல்லிகா, தட்டான்குட்டை ஊராட்சி செயலர் தங்கராசு, பஞ்சாலை சண்முகம், மோகன், விடியல் பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story