குமாரமங்கலம் ஸ்ரீ பொன் காளியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி முப்பாட்டு முறையினர் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்துள்ள குமாரமங்கலம் ஸ்ரீ பொன் காளியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி முப்பாட்டு முறையினர் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு
திருச்செங்கோடு இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குமாரமங்கலம் பொன்காளியம்மன் கோவில் திருவிழாகடந்த நாலாம் தேதி பூச்சாட்டுகளுடன்தொடங்கியுள்ளது.இதனை ஒட்டிஇந்த கோவிலில் உள்ள பங்காளி அம்மனை குலதெய்வமாக வழிபடும் முப்பாட்டு முறை கொண்ட பாண்டிய வேட்டுவ கவுண்டர்கள் குலத்தைச் சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள்இறையமங்கலம் காவேரி கரைக்குச் சென்றுதீர்த்தம் எடுத்து வந்து குமாரமங்கலம் பாண்டீஸ்வரர் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து கோவிலில் அம்மனுக்கு தீர்த்தத்தில் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாவதனைகள் காட்டி வழிபட்டனர் இந்த நிகழ்ச்சிக்கு முப்பாட்டுக்காரர் காளியண்ண கவுண்டர், கம்பத்துக்காரர் பரமசிவம், குதிரை பிடிப்பவர் செந்தில்குமார், கிடாய்காரர் பழனிச்சாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காவிரி நீர் பன்னீர் சந்தனம் அபிஷேகத்திற்கு தேவையான தீர்த்தங்கள் என பல்வேறு வகையான திரவியங்களை 108 குடங்களிலும் மற்ற பெண்கள் காவிரி நீரையும் தீர்த்தமாக எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தனர்.பம்பைக்காரர் அடித்த மேளத்தில் அருள் வந்து பலரும் சாமி ஆடினார்கள்.
Next Story