குமாரபாளையம் ம.நீ.ம. மகளிரணி நிர்வாகிகளுக்கு விருதுகள்

குமாரபாளையம் ம.நீ.ம. மகளிரணி நிர்வாகிகளுக்கு விருதுகள்
X
சிவகாசியில் நடந்த மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமலஹாசன் பிறந்த நாள் விழாவில் சமூக சேவை செய்த குமாரபாளையம் மகளிரணி நிர்வாகிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விருதுநகர் மத்திய மாவட்டம் தலைமை கமலஹாசன் நற்பணி இயக்கம், சிவகாசி மாவட்ட செயலாளர் நாகராஜ் ஏற்பாட்டில் மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமலஹாசன் பிறந்த னால் விழா கொண்டாடப்பட்டது. இதில் 4 இடங்களில் தண்ணீர் தொட்டி திறப்பு, ரத்த தான முகாம், மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கல், ஏழை, எளியவர்களுக்கு அரிசி, காய்கறி, வேட்டி, சேலை வழங்குதல், மாணவர்களுக்கு சீருடை மற்றும் நோட்டுகள் வழங்குதல், சமூக சேவை செய்தவர்களுக்கு பாராட்டு விருது வழங்கல் ஆகியன நடந்தன. ரத்த தேவைக்கு உதவுதல், உடல் உறுப்பு தானம் பெற வைத்தல், கண் தானம் செய்தல், ஆதார், ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெறுதல், பெயர் திருத்தும் செய்ய உதவுதல், மருத்துவ காப்பீடு மூலம் ஏழை எளியவர்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்ய உதவுதல்,வடிகால் பராமரிப்பு சாலை வசதி மேம்படுத்துதல், பேருந்துகள் இல்லாத பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகள் செய்து வரும் நாமக்கல் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா, மல்லிகா, மதுரை பத்மாவதி, உமையாள், ஜோதிமணி, சுகுணா மற்றும் சிவகங்கை, பாண்டிச்சேரி, சேலம் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் சமூக சேவை செய்த மகளிர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதில் மதுரை மேயர் சங்கீதா, எம்.எல்.ஏ. அசோகன் உள்பட பலர் பங்கேற்று விருதுகள் வழங்கி பாராட்டினர். ரத்ததான முகாமில் 200க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததனம் வழங்கினர். ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Next Story