கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு ராசிபுரத்தில் நாயகன் திரைப்படம் நிர்வாகிகள் கொண்டாட்டம்...

X
Rasipuram King 24x7 |9 Nov 2025 9:19 PM ISTகமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு ராசிபுரத்தில் நாயகன் திரைப்படம் நிர்வாகிகள் கொண்டாட்டம்...
உலகநாயகன் பத்மபூஷன் எம்பி கமலஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு ராசிபுரத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் அவர் நடித்து வெளிவந்த நாயகன் திரைப்படம் ராசிபுரம் சாமுண்டி டி. என். சி. திரையரங்கில் வெளியிடப்பட்டது. கமலஹாசன் அவர்கள் 71.வது பிறந்த நாளை முன்னிட்டு நாயகன் திரைப்படம் பல்வேறு பகுதிகளில் வெளியிடப்பட்டுள்ளது. அதே போல் ராசிபுரத்தில் வெளியிடப்பட்டுள்ள நாயகன் திரைப்படத்தை கொண்டாடும் வகையில் மக்கள் நீதி மையம் சார்பிலும், நம்மவர் தொழிற்சங்க பேரவை சார்பிலும் உற்சாகமாக கொண்டாடினர். இதற்கு மக்கள் நீதி மையம் மாவட்ட செயலாளர் ஜெ.பி.(எ). ஜெயபிரகாஷ், மாவட்ட பொருளாளர் மணி (எ) மாணிக்கவாசகம் ஆகியோர் ஆலோசனைப்படி.. நம்மவர் தொழிற்சங்க பேரவை மாநில துணைச் செயலாளர் ஏ.ராஜு, அவர்கள் தலைமையில் நம்மவர் பேரவையின் மாநில மண்டல செயலாளர் ஆர். ஹீரோ பூபதி, ஒன்றிய செயலாளர் ராஜா, நகரச் செயலாளர் எம். ரமேஷ், நகர செயலாளர் மக்கள் நீதி மையம் சுரேஷ், மகளிர் அணி கவிதா, அருண்குமார் பொறியாளர் அணி மதன்குமார், மற்றும் டாக்டர் பூவிழி, S. திவ்யா, பொறியாளர் அரவிந்தன், வழக்கறிஞர் அழகி மற்றும் பலர் பொதுமக்களுக்கு, ரசிகர்களுக்கு திரையரங்கு முன்பாக இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்..
Next Story
