திருச்செங்கோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு இன்று முதல் செயல்பட துவங்கியது செயல்பாட்டை எம்எல்ஏ ஈஸ்வரன் ஆய்வு
Tiruchengode King 24x7 |10 Nov 2025 10:44 AM ISTமாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு இணையாக அமைக்கப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தில் புற நோயாளிகள் பிரிவு இன்று முதல் செயல்பட தொடங்கியது. செயல்பாட்டை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆய்வு உள்நோயாளிகள் பிரிவை விரைந்து தொடங்க தலைமை மருத்துவருக்குஅறிவுறுத்தல்
நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாக 23 கோடி மதிப்பீட்டில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை தரைதலத்துடன் கூடிய ஐந்து கட்டிடமாக உருவாக்கப்பட்டு கடந்த ஐந்தாம் தேதி திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் திறந்து வைத்தார்.உடனடியாக அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தில் செயல்பட துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அரசு மருத்துவ மனையில் ஐந்து நாட்களுக்குப் பிறகு இன்று முதல் புற நோயாளிகள் பிரிவு, மருந்தகம்,கர்ப்பிணி பெண்கள் பரிசோதனை செய்யும் இடம் ஆய்வகம் போன்றவைகள் செயல்பட துவங்கின. அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தில் செயல்பட துவங்கி உள்ள புறநோயாளிகள் பிரிவு சேவையை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் இன்று திடீர் ஆய்வு செய்தார். நோயாளிகளுக்கு டோக்கன் வழங்கப்படும் இடம் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு மருத்துவ சேவைகள் மற்றும் மருந்தகத்தின் சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் புதிய மருத்துவமனை கட்டிடத்தை தூய்மையாகவும் சுத்தமாகவும் தினமும் பராமரிக்க வேண்டும் பொதுமக்களுக்கு நோயாளிகளுக்கு எவ்வித இடையூறும் இன்றி செயல்பட வேண்டும் செவிலியர்கள் மற்றும் அலுவலர்கள் நோயாளிகளிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் மோகன பானுவிடம்அறிவுறுத்தினார்.மேலும் உள் நோயாளிகள் பிரிவு நாட்களுக்குள் செயல்படும் வகையில் படுக்கைகளை இடம் மாற்றி புதிய படுக்கைகளை போட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.அனுமதிக்கப்பட்ட அளவு மருத்துவர்கள் 20 பேர் பணியில் இருப்பதாகவும் ஏழு பேர் கூடுதலாக நியமிக்கப்பட இருப்பதாகவும் செவிலியர்கள் 64 பேர் இருப்பதாகவும் பாதுகாவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை அதிகப்படுத்த இருப்பதாகவும் திறப்பு விழா அன்று அமைச்சர் சுப்பிரமணியம் பேட்டி கொடுத்திருந்த நிலையில் 5835 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மருத்துவமனையாக விரிவாக்கம் செய்யப்பட்டு கூடுதலாக புற நோயாளிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அனுமதிக்கப்பட்ட அளவான 64 செவிலியர்கள் பணியில் இருந்தாலும் 11 பேர் மகப்பேறு கால விடுப்பிலும் மேலும் 5 பேர் டெபிட்டேசனில் வேறு பணிகளுக்கு சென்று விடுவதால் செவிலியர் பற்றாக்குறை இருப்பதும் இவ்வளவு பெரிய கட்டிடத்திற்கு இரண்டு ஷிப்டுகளுக்கு இரண்டே பாதுகாவலர்கள் மட்டும் தற்போது பணியில் இருப்பதும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு 25 பேர் தேவைப்படும் நிலையில் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதாலும் மருத்துவமனையை தூய்மையாக பராமரிக்கவும் பாதுகாப்பாக வைத்திருக்கவும் விரைந்து கூடுதல் பணியாளர்களை நியமித்து தர வேண்டும்,இதுவரை கூடுதல் படுக்கைகள் மருத்துவ மனைக்கு வந்து சேராத நிலையில் விரைவில் புதிய படுக்கைகள் வந்தால் தான் உள் நோயாளிகளாக இருப்பவர்களை புதிய படுக்கைகளுக்கு மாற்றி விட்டு பழைய கட்டிடத்தில் உள்ள படுக்கைகளை இடமாற்றம் செய்து மருத்துவமனையை நிர்வகிக்க முடியும் எனவே விரைந்து புதிய படுக்கைகள் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Next Story





