நாமக்கல்லில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் கையில் தராசு ஏந்தியும் , கும்மியடித்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்!

நாமக்கல்லில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் கையில் தராசு ஏந்தியும் , கும்மியடித்தும்  நூதன முறையில் ஆர்ப்பாட்டம்!
X
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் நீதி தராசு கையில் ஏந்தியும், கும்மியடித்தும் முழக்கப் போராட்டத்திற்கு சங்க மாவட்ட துணை தலைவர் சி.வேலு தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் க.ரவிக்குமார் முன்னிலை வகித்தார், மாவட்ட செயலாளர் ப.ரவி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.ஆர்ப்பாட்டத்தில், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், உயிரிழந்த சாலைப்பணியாளர்கள் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ந.தனசேகரன், செயலாளர் இரா.முருகேசன், இணை செயலாளர் கா. பார்த்திபன், பொருளாளர் மயில்சாமி, கால்நடை முதுநிலை மேற்பார்வையாளர் இளங்கோவன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story