நாமக்கல்லில் வருகிற புதன்கிழமை கரண்ட் கட்!

நாமக்கல்லில் வருகிற புதன்கிழமை கரண்ட் கட்!
X
நாமக்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் வருகிற புதன்கிழமை நவம்பர் -12 (வியாழக்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் வருகிற புதன்கிழமை(நவம்பர் 12) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து நாமக்கல் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ஆர்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது..நாமக்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வருகிற புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. அதன் விவரம்: நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிச்செட்டிபட்டி வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, முதலைப்பட்டி, போதுப்பட்டி, தூசூர், NGO'S காலனி, சின்ன முதலைப்பட்டி, வீசாணம் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது, எனவே தகுந்த முன் ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.
Next Story