திருச்செங்கோடு அருகே வீடு எடுத்து விபச்சாரதொழில் செய்து வந்த இரண்டு பெண்கள் ஒரு ஆண் என மூன்று பேர் கைது ஊரக காவல்துறை நடவடிக்கை

திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரும கவுண்டம்பாளையம் அருகே உள்ள அம்மையப்பா நகரில் வீடு எடுத்துபாலியல் தொழில் செய்து வந்தஇரண்டு பெண்கள் ஒரு ஆண் என மூன்று பேர் கைது. ஊரக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை எடுத்து அதிரடி நடவடிக்கை
திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரும கவுண்டம்பாளையம் அம்மையப்பா நகர் பகுதியில் வீடு எடுத்து பாலியல் தொழில் செய்து வருவதாக திருச்செங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளர் ஊரக காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு ஆய்வாளர் வளர்மதிக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில்அங்கு இரண்டு பெண்கள் ஒரு  ஆண் விபச்சார தொழில் செய்து வந்ததும் புரோக்கர்களாக செயல்பட்டு வந்ததும் தெரிய வந்தது..இதன் அடிப்படையில் கூட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சேதுபதி ராஜா என்பவரது மனைவி சுகன்யா 38 கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் மனைவி ஷீலா தனலட்சுமி 49 ராசிபுரத்தைச் சேர்ந்த அப்பாவு என்பவர் மகன் ஜெயக்குமார் 40 ஆகியோரை ஊரக போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிரங்கராஜன்15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.எதனை எடுத்து கைது செய்யப்பட்ட மூவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story