வன்முறையால் இந்திய ஒற்றுமையை சிதைக்க நினைப்பவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் கடும் கண்டனத்தை தெரிவித்த எம் எல் ஏ. இ.ஆர். ஈஸ்வரன்.

X
NAMAKKAL KING 24X7 B |11 Nov 2025 5:59 PM ISTகொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் மற்றும் திருச்செங்கோடு எம்.எல் ஏ இ .ஆர்.ஈஸ்வரன் நேற்று டெல்லியில் கார் வெடிகுண்டு வெடித்த சம்பவம் நாட்டையே உலுக்கி இருக்கின்றது.
நாடு முழுவதும் மக்களுக்கு ஒரு விதமான பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது. வெடிகுண்டு சம்பவத்தில் ஈடுபட்டு பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியவர்கள் தனிமனிதராக இருப்பதற்கு வாய்ப்பில்லை. இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க நினைப்பவர்களுடைய திட்டமாகத்தான் இருக்கும். தலைநகர் டெல்லியில் உயர் பாதுகாப்பு பகுதியில் நடந்தேறிய இந்த கொடூர சம்பவம் நாட்டின் பாதுகாப்பு அமைப்பின் மீது நம்பிக்கை இழக்க வைக்கிறது. இதைப் போன்ற சம்பவங்கள் நடக்கும் போது கண்டனம் தெரிவிப்பதோடும், அரசு வருத்தம் தெரிவிப்பதோடும், இழப்பீடு வழங்குவதோடும் நின்று விடக்கூடாது. இந்த நேரத்தில் தேசம் முழுவதும் ஒற்றுமையாக இருந்து எதிர் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. தலைநகர் டெல்லியிலேயே உளவுத்துறை செயல் இழந்தால் மற்ற பகுதிகளை எப்படி பாதுகாப்பது. நாட்டு மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும், அதன் பின்னணியில் இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியும், அவர்தம் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
Next Story
