மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தல்: மீட்க கோரி குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு!!

X
Ottapidaram King 24x7 |11 Nov 2025 7:10 PM ISTமாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த மூவரை மீட்க கோரி குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கலப்பைபெட்டி பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து (வயது 40), நாரைகினறு பகுதியை சேர்ந்த பொன்னுதுரை (வயது 49), கொடியங்குளம் பகுதியை சேர்ந்த புதியவன் (வயது 51) ஆகியோர் சிலருடன் சேர்ந்து டவர் அமைக்கும் பணிக்காக சுமார் எட்டு மாதங்களுக்கு முன் மாலி நாடு சென்றிருந்தனர். அங்கு கடந்த எட்டு மாதங்களாக பணியாற்றி வந்த நிலையில், சமீபத்தில் மாலி நாட்டு நிர்வாகம், இவர்களை தீவிரவாதிகள் கடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இத்தகவலை அறிந்த குடும்பத்தினர் தங்கள் உறவினரை மீட்கக் கோரி ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகய்யா உடன் சேர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
Next Story
