தெள்ளூர் வீட்டுமனைகளை ஆதிதிராவிடர் நத்தமாக மாற்றம் செய்ய மாவட்ட நலஅலுவலர் உத்தரவு.

X
Arani King 24x7 |11 Nov 2025 7:58 PM ISTஆரணி அடுத்த தெள்ளூர் வீட்டுமனைகளை ஆதிதிராவிடர் நத்தமாக மாற்றம் செய்து தரவேண்டும் என்று சேத்துப்ப்டடு வட்டாட்சியருக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலஅலுவலர் உத்தரவிட்டார்
ஆரணி அடுத்த தெள்ளூர் வீட்டுமனைகளை ஆதிதிராவிடர் நத்தமாக மாற்றம் செய்து தரவேண்டும் என்று சேத்துப்ப்டடு வட்டாட்சியருக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலஅலுவலர் உத்தரவிட்டார். ஆரணி அடுத்த தெள்ளூர் கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஆதிதிராவிட இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காததை குறித்து தெள்ளூர் சேகர் கொடுத்த மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட மாவட்ட ஆதிதிராவிட நலஅலுவலர், தெள்ளூர் கிராம சர்வே எண் 1994 ல் ஒரு ஏக்கர் 79 சென்ட் கையகப்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து அதே ஊரைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்த இடத்தை ஆதிதிராவிட நத்தமாக வகை மாற்றம் செய்யும் பொருட்டு சேத்துப்பட்டு வட்டாட்சியருக்கு உத்தரவிட்டு மாவட்ட ஆதிதிராவிடர் நலஅலுவலர் கோப்பு அனுப்பியுள்ளார். இதனால் உடனடியாக சேத்துப்பட்டு வட்டாட்சியர் ஆதிதிராவிட நத்தமாக வகை மாற்றம் செய்யபட்டு ஆதிதிராவிடர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இது குறித்து செய்யார் கோட்டாட்சியரிடமும் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
Next Story
