விலகிய டிவைடரால் விபத்து அபாயம்

X
Komarapalayam King 24x7 |11 Nov 2025 8:00 PM ISTகுமாரபாளையத்தில் விலகிய டிவைடரால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
குமாரபாளையம் சேலம் சாலை, ஆனங்கூர் பிரிவு பகுதியில் சிட்டி யூனியன் வங்கி அருகே டிவைடர் சற்று விலகியுள்ளது. இது தெரியாமல் டூவீலர் ஓட்டுனர்கள் பலரும் இதில் மோதி விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இரவு நேரத்தில் அதிக அளவிலான வாகன ஓட்டிகள் இதில் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகிறார்கள். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, இந்த டிவைடரை நேராக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story
