வெள்ளகோவில் அருகே மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற கணவன் - கைது

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கணபதிபாளையம் அருகே கால்நடைகளை வளர்ந்துவந்த தம்பதிகள் இடையே தகராறு. மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவன் கைது 
காங்கேயம் வெள்ளகோவில் அருகே கணபதி பாளையம் அப்பையன் காட்டில் வசித்து வரும் தம்பதியினர் பெரியசாமி (77) புஷ்பாத்தாள்(65). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்தமகன் பரமசிவன் மனநலம் பாதித்து தாய் தந்தையுடன் வசித்துவருகின்றார். இளைய மகன் முருகேசன் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். கோழி,ஆடுகளை வளர்த்து விற்பனை செய்துவருவதாகவும் அதில் வரும் வருமானத்தை மனைவி புஷ்பாத்தாள் கணவருக்கு கொடுப்பதில்லை என்றும் இதனால் இருவரிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் எனவும் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு பெரியசாமி, புஷ்பாத்தாள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதை அடுத்து கணவன் பெரியசாமி கட்டையால் மனைவி புஷ்பாத்தாலை அடித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து வெள்ளகோவில் காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் கணவன் பெரியசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
Next Story