வெள்ளகோவிலில் மாணவர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

X
Kangeyam King 24x7 |12 Nov 2025 11:36 AM ISTவெள்ளகோவிலில் மாணவர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு புனித அமலா அன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
வெள்ளகோவில் புனித அமலஅன்னை மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு அலுவலர் டாக்டர் சவுமியா தலைமை தாங்கினார். புகையிலைப் பொருட்கள், போதைப் பொருட்கள், அவற்றால் ஏற்படும் புற்றுநோய் உள்பட உடல் நல பாதிப்புகளும், மீளும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசகர் பிரவீன் எடுத்து கூறினார். மேலும் காணொலி காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. போதைப் பொருள் ஒழிப்பு குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருப்பசாமி, சுகாதார ஆய்வாளர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
