பளு தூக்கும் போட்டியில் அனைத்து சாம்பியன் பட்டத்தினை வென்று சாதனை படைத்த டிரினிடி கல்லூரி மாணவிகள்.

பளு தூக்கும் போட்டியில்  அனைத்து சாம்பியன் பட்டத்தினை வென்று சாதனை படைத்த டிரினிடி கல்லூரி மாணவிகள்.
X
தமிழ் நாடு மாநில பளு தூக்கும் சங்கமானது, சேலம் மாவட்ட பளு தூக்கும் சங்கத்தின் பங்களிப்புடன் இளையோர் மற்றும் மூத்தோர் (ஆடவர் மற்றும் மகளிர்) பளு தூக்கும் போட்டிகளை சேலம் - தாதகாப்பட்டி - ஶ்ரீ மதுரகாளியம்மன் பொது மகாஜனா திருமண மண்டபத்தில் நடத்தியது.
இதில் நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர் அசத்தலான முறையில் பங்குகொண்டு ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதில் எஸ். பிரீத்தி, 69 கிலோ எடைப்பிரிவிலும், எஸ். ரசிகா, 63 கிலோ எடைப்பிரிவிலும், எம். தீபஶ்ரீ, 77 கிலோ எடைப்பிரிவிலும், எஸ். பவதாரிணி, 48 கிலோ எடைப்பிரிவிலும் முதலாம் இடம் பெற்று இந்த சாதனையை படைத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக கல்லூரி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் & நாமக்கல் - தென்பாண்டியன் தொழில் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் & நாமக்கல் - ஆஞ்சநேயர் மற்றும் லட்சுமி நரசிம்மர் திருக்கோவில்களின் அறங்காவலர் குழுத் தலைவருமான கே. நல்லுசாமி தலைமை தாங்கி வெற்றி பெற்றவர்களை பாராட்டினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன் மற்றும் உடற்கல்வி இயக்குநர் வீ. அர்ச்சனா ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story